AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெல்லையில் தந்தை- மகன் கொடூரமாக வெட்டி கொலை.. தலையை சாலையில் வீசி சென்ற கும்பல்!

Nellai Father And Son Murder: நெல்லை மாவட்டத்தில் வீரவநல்லூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தை மற்றும் மகன் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது தலையை நடு ரோட்டில் வீசி சென்றது.

நெல்லையில் தந்தை- மகன் கொடூரமாக வெட்டி கொலை.. தலையை சாலையில் வீசி சென்ற கும்பல்!
நெல்லையில் தந்தை மகன் வெட்டி படுகொலை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Jul 2026 17:59 PM IST

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட மூலச்சி கிராமத்தைச்  சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு மனைவி மற்றும் ஜெயராஜ் ( 5 வயது), சின்னராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், காளிமுத்து தனது இரு மகன்களுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வீரவநல்லூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தின் வழியாக மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் காளி முத்து ஓட்டுச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த காளிமுத்து சுதாரிப்பதற்குள் காரில் இருந்து இறங்கி வந்த மர்ம கும்பல் அவர்களை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவர்களை சரமாரியாக வெட்டியது. இதில், கண் இமைக்கும் நேரத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த தந்தை காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிக்க துடிக்க உயிரிழந்தனர்.

தந்தை மகனை கொலை செய்து தலை நடுரோட்டில் வீச்சு

உடனே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. மேலும், காளிமுத்து மற்றும் சிறுவன் ஜெயராஜின் தலையை துண்டித்த அந்த கும்பல் நெல்லை சாலையில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் மற்றொரு மகனான சின்னராஜ் பலத்த வெட்டு காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!

சம்பவ இடத்தில் நெல்லை எஸ்பி விசாரணை

அதன் பேரில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட காளிமுத்து மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் சடலங்கள் மற்றும் தலை ஆகியவற்றை போலீசார் மீட்டு உடல் கூராய்வு செய்வதற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை கும்பல் தாக்குதலில் பலத்த வெட்டு காயம் அடைந்த சிறுவன் சின்னராஜ்ஜும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

10 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழி தீர்ப்பு

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்டதாகவும், அந்த கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் தற்போது காளிமுத்து மற்றும் அவரது மகன் ஜெயராஜ் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர்களின் தலையை துண்டித்து பெருமாளின் சமாதியில் அந்த கும்பல் வைத்து சென்றதாக கூறப்படுகிறது. காளிமுத்து மற்றும் பெருமாள் தரப்பினருக்கிடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்? பதிலளிக்காமல் சென்ற அமைச்சர்

Follow Us