சர்தார் 2 படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த எஸ்.ஜே.சூர்யா – வைரலாகும் வீடியோ
SJ Suryah completes dubbing for Sardar 2 movie | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் சர்தார் 2 படத்தின் டப்பிங் பணியை முடித்ததாக வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படம் வாலி. நடிகர் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநராக தமிழ் சினிமாவில் வரவேற்பைப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா நாயகனாக தொடர்ந்து பலப் படங்களில் நடித்து உள்ளார். இயக்குநராக இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் வரவேற்பைப் பெறுவது போல நாயகனாக நடித்து வெளியான படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நாயகனாக நடித்து வந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வில்லனாக நடித்து வருகிறார். தொடர்ந்து வில்லன் என்றாலே எஸ்.ஜே.சூர்யா என்று கூறும் அளவிற்கு அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவிலும் அடுத்தடுத்து படங்கள் வரிசைக்கட்டி வெளியாகி வருகின்றது.




சர்தார் 2 படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த எஸ்.ஜே.சூர்யா:
அதன்படி தற்போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா சர்தார் 2 படத்தில் வில்லனாக நடித்து உள்ளார். நடிகர் கார்த்தி இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இயக்குநர் பி.எஸ்.மித்திரன் எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 10-ம் தேதி செப்டம் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது டப்பிங் பணியை முடித்துள்ளார். அந்த வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
சர்தார் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
An actor who aces dubbing every single time 🎙️
The explosive @iam_SJSuryah having fun….voicing his favourite dialogs 💥#OnceAspyAlwaysaSpy#Sardar2FromSep10@Karthi_Offl @Psmithran @iam_SJSuryah @ivyofficial2023 @SamCSmusic @george_dop @editorvijay @rajeevan69 pic.twitter.com/TC1FuHtuxK
— Prince Pictures (@Prince_Pictures) August 18, 2026
Also Read… Jailer 2 : விருந்து தயார்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!