லப்பர் பந்து படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது – எஸ்.ஜே.சூர்யா சொன்ன விசயம்
SJ Suriya talks about Lubber Pandhu Movie: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசிய போது லப்பர் பந்து படத்தில் நடிக்க வைக்க வேண்டி தன்னை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து சந்தித்தது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் சினிமவிற்கு என்ட்ரி கொடுத்தார் எஸ்.ஜே.சூர்யா. அதனைத் தொடர்ந்து இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா கலம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த வாலி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தான் நடிகர் அஜித் குமார் இரட்டை வேடத்தில் முதன் முறையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அடுத்தடுத்தப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித் குமார், விஜய் என இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இயக்குநராக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த எஸ்.ஜே. சூர்யா பிறகு தமிழ் சினிமாவில் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களில் அவரே இயக்கி நாயகனாகவும் நடித்து வந்தார். பிறகு தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு உட்பட மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யா பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
லப்பர் பந்து படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது:
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, ‘லப்பர் பந்து’ படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். நான் அதில் ஒரு மாற்றத்தைக் கோரினேன்; அவரும் அதைச் சரிசெய்து மீண்டும் என்னிடம் கொண்டு வந்தார். நான் மீண்டும் ஒரு மாற்றத்தைக் கேட்டேன்; அவரும் அதை மறுபடியும் மாற்றியமைத்தார். அதன்பிறகு, கதையில் மேலும் ஏதேனும் மாற்றம் செய்தால் அது திரைக்கதையின் தரத்தையே கெடுத்துவிடும் என்று நான் இயக்குநரிடம் கூறினேன். அந்தப் பாத்திரத்தை வேறு சிலரை வைத்துச் செய்யுமாறு நான் பரிந்துரைத்தேன்; இறுதியில், அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
Also Read… Karuppu: ராத்து ராசன் இவன்…. சூர்யாவின் கருப்பு படத்திலிருந்து வெளியான அடுத்த பாடல்!
இணையத்தில் வைரலாகும் எஸ்.ஜே.சூர்யா பேச்சு:
#SJSuryah:
“Director Tamilarasan Pachamuthu narrated #LubberPandhu story to me. I asked for a change, he corrected & bought it. I again asked for a chance, he made it again. After that I told director to not make any change, as it will spoil the script. I asked to do the role… pic.twitter.com/gvjNWaoPRb— AmuthaBharathi (@CinemaWithAB) April 15, 2026
Also Read… புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்



