AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி தட்கல் டிக்கெட்டை ஏஐ மூலம் உறுதி செய்யலாம்.. IRCTC இணையதளத்தில் அட்டகாசமான அம்சம்!

Confirm Tatkal Ticket In IRCTC With AI | முன்பு இருந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பயனர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டு வந்தா நிலையில், ஜூலை 15, 2026 அன்று புதிய, மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.

இனி தட்கல் டிக்கெட்டை ஏஐ மூலம் உறுதி செய்யலாம்.. IRCTC இணையதளத்தில் அட்டகாசமான அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jul 2026 16:13 PM IST

இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரதானமாக உள்ளது ரயில் பயணம் தான். குறைந்த விலையில் மிக விரைவாகவும், அதிக தூரம் பயணம் செய்ய முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில் பயணம் மிகவும் எளிதானதாக இருந்தாலும், ஐஆர்சிடிசி (IRCTC – Indian Railway Catering and Tourism Corporation) ரயில் டிக்கெட் முன்பதிவு அத்தகைய எளிதான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாக தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான், செயற்கை நுண்ணறிவு அம்சம் தட்கல் டிக்கெட் முன்பதிவை மிக சுலபமானதாக மாற்றியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகம்

முன்பு இருந்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்க்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தான், ஜுலை 15, 2026 அன்று மேம்படுத்தப்பட்ட புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இணையதளம் முன்பு இருந்ததை விட மிக விரைவாக செயலாற்றும் தன்மை கொண்டது. அதாவது, பழைய இணையதளம் ஒரு நிமிடத்தில் வெறும் 32,000 டிக்கெட் முன்பதிவுகளை மட்டுமே கையாளும் தன்மை கொண்டு இருந்தது. ஆனால், இந்த புதிய இணையதளம் ஒரு நிமிடத்தில் சுமார் 1.5 லட்சம் டிக்கெட் முன்பதிவுகளை கையாளும் திறன் கொண்டுள்ளதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Bank Holiday : ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ.. நோட் பண்ணுங்க!

இனி மிக விரைவாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

முன்னதாக ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால், இணையதளம் ஹேங் ஆகி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போய்விடும். ஆனால், இப்போது லாக் இன் செய்யாமலே ரயில்கள், இருக்கை விவரங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே பயனர்களால் தெரிந்துக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி, இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் ஒரே இடத்தில் ஸ்லீப்பர், ஏசி உள்ளிட்ட அனைத்து வகுப்புகளின் இருக்கைகளும் காட்டுவதால் இணையதளத்தை ரிஃபிரஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க : நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் UPI.. புதிய அம்சத்தை கொண்டு வர திட்டம்!

தட்கல் டிக்கெட்டுக்கு வந்த ஏஐ

இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் மூலம் தட்கல் டிக்கெட் உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காத என்பதை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளலாம். அதற்காக ஏஐ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படுமா, இல்லையா என்பதை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us