AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bank Holiday : ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ.. நோட் பண்ணுங்க!

9 Days Holidays Declared For Banks | ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Bank Holiday : ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ.. நோட் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Jul 2026 11:57 AM IST

ஒவ்வொரு மாதமும் அரசு பண்டிகை, வார விடுமுறை உள்ளிட்டவற்றின் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். தற்போது ஜூலை மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் ஒருசில நாட்களில் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எந்த எந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

  • ஆகஸ்ட் 02, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 08, 2026 – வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 09, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 15, 2026 – சுதந்திர தினம் என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 16, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 22, 2026 – வாரத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 23, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 25, 2026 – மிலாடி நபி பண்டிகை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆகஸ்ட் 30, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் ஏன் காப்பீட்டு தொகை அதிகம்? காரணம் இதுதான்!

விடுமுறையின்போது என்ன செய்ய வேண்டும்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி சேவை பெற விரும்பும் நபர்கள் அதற்கு ஏற்ப தங்களது பணிகளை திட்டமிட்டுக்கொள்ளலாம். இதுதவிர வழக்கம் போல ஏடிஎம் (ATM – Automated Teller Machine), வங்கிகளின் மொபைல் செயலிகள், யுபிஐ (UPI – Unified Payment Interface) உள்ளிட்டவை செயல்பாட்டில் இருக்கும். அவற்றை பயன்படுத்தி பொதுமக்கள் தடையற்ற பண பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி சேவைகளை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us