AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம்.. மீண்டும் வருகிறது MDR முறை!

MDR To Be Reintroduce In India | யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு, பெரிய வணிக நிறுவனங்களுக்கு கட்டணம் விதிக்கும் எம்டிஆர் (MDR - Merchant Discount Rate) அம்சத்தை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.2,000-க்கு மேல் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம்.. மீண்டும் வருகிறது MDR முறை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jul 2026 13:24 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக இருக்கும் பண பரிவர்த்தனை முறை தான் யுபிஐ (UPI – Unified Payment Interface). பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ மூலம் தான் தங்களது அன்றாட பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக கையில் பணம் வைத்து செலவு செய்யும் பழக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தான், யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு கட்டணம் விதிக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Merchant Discount Rate அம்சத்தை மீண்டும் அறிமுகம் செய்ய அரசு திட்டம்?

பெரிய வர்த்தக நிறுவனங்கள் யுபிஐ மூலம் பெறும் ரூ.2,000-க்கு மேலான பண பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) எனப்படும் கட்டண முறையை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிய கடைகள் அன்றி, பெரிய வர்த்தகம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் ஆகும்.

இதையும் படிங்க : காரில் எந்த வேகத்தில் பயணித்தால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்? சிறந்த மைலேஜ் கிடைக்க எளிய வழிகள்

யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்?

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக  வருமானம் ஈட்டும் சிறு வனிகர்களுக்கு பரிவர்த்தனை தொகை எவ்வளவாக இருந்தாலும், அவர்களுக்கு இதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். இது சிறு வணிகர்களுக்கு சற்று ஆறுதல் தருவதாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு அவ்வளவு நல்ல செய்தியாக இருக்காது. காரணம், இந்த திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில் பரிவர்த்தனை மதிப்பில் அதிகபட்சமாக 0.5 சதவீதம் வரை எம்டிஆர் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க : இனி கேஸ் சிலிண்டரையும் ஸ்விகியில் ஆர்டர் செய்யலாம் – சில நிமிடங்களில் கிடைக்கும் – எப்படி செய்வது?

இந்த திட்டம் அமல்படுத்தப்படுவது தொடர்பாக அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த எம்டிஆர் திட்டம் அமலில் இருந்த நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி 2026 முதல் எம்டிஆர் கட்டணத்தை அரசு நீக்கியிருந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us