பெண்களுக்கு சிறந்த லாபம் தரும் பிரத்யேக அஞ்சலக திட்டங்கள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
Investment Scheme For Women | அஞ்சலங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் அசத்தல் அஞ்சல திட்டங்கள் குறித்தும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் நிதி பாதுகாப்பு (Financial Security) என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெண்கள் நிதி பாதுகாப்பு இல்லாமல் தான் உள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பு தங்களது குடும்பத்தையும், திருமணத்திற்கு பிறகு கணவரையுமே நிதி பாதுகாப்புக்கு நம்பியுள்ளனர். ஆனால், பெண்கள் தங்களுக்கான நிதி பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், பெண்கள் நிதி பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் சில சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண்களுக்கான பிரத்யேக அஞ்சலக திட்டங்கள்
பெண்கள் நிதி பாதுகாப்பு பெறும் வகையில், அரசு அவர்களுக்காக அஞ்சலகங்கள் மூலம் பிரத்யேக சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நிதி பாதுகாப்பு மிக்கதாக மாற்றும் வகையில், அஞ்சலங்கள் மூலம் அரசு செயல்படுத்தி வரும் அசத்தல் திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana). இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் குழந்தைகளாக இருக்கும்போதில் இருந்தே அவர்களது பெயர்களில் முதலீடு செய்யலாம். அவர்கள் தங்களது 21 வயதை நிறைவடையும்போது அந்த பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி உள்ளது.




இதையும் படிங்க : வருகிறது 10 கிலோ கேஸ் சிலிண்டர்.. தீவிர ஆலோசனையில் எண்ணெய் நிறுவனங்கள்!
ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயர்களில் ஆண்டுக்கு ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பெண் குழந்தைகளின் பெயர்களில் கணக்கு தொடங்கி முதலீடு செய்யலாம். ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளின் பெயர்களில் மட்டுமே இந்த திட்டட்தில் முதலீடு செய்ய முடியும்.
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் (MSSC – Mahila Samman Savings Certificate). 2 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,000 முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து சிறந்த பலன்களை பெறலாம்.