செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.50 லட்சம் பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
Sukanya Samriddhi Yojana Scheme Investment | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. இந்த திட்டத்தில் முதலீடு செய்து ரூ.50 லட்சம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுமக்கள் பாதுகாப்பாக சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்பதற்காக அரசு அஞ்சலகங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana). இந்த திட்டத்திற்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த திட்டத்தை பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைத்து அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ரூ.50 லட்சம் பணத்தை உருவாக்க வேண்டும் என்றால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க உதவும் திட்டம்
செல்வமகள் சேமிப்பு திட்டம் 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக நீண்ட கால நிதியை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம் முதிர்வு காலத்தில் நல்ல தொகையை பெற முடியும்.
இதையும் படிங்க : மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. ஒரு லிட்டர் பெட்ரோல் 100-ஐ தாண்டியது!




ரூ.50 லட்சம் நிதியை உருவாக்குவது எப்படி?
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பெண் குழந்தை, குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே அவர்களின் பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ முதலீடு செய்ய தொடங்கலாம். இந்த நிலையில், இந்த திட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.1,05,000 முதலீடு செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அவ்வாறு முதலீடு செய்யும் காலம் முழுவதும் வட்டி விகிதம் மாறாமல் இருந்தால், 21 ஆண்டுகளின் முடிவில் முதிர்வு தொகை ரூ.50.27 லட்சம் கிடைக்கும்.
இதையும் படிங்க : மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இதில் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது, அதுதான் கூட்டு வட்டி. அதாவது, இந்த திட்டத்தில் நீங்கள் வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்வீர்கள். ஆனால், 21 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டியின் அடிப்படையில் பலனை பெறுவீர்கள். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.