AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

20களில் முதலீடு செய்யவில்லை என்ற கவலை வேண்டாம்.. 30களில் முதலீடு செய்தும் பெரிய தொகையை உருவாக்கலாம்!

Investment Ideas For 30s | ஒருவர் தனது 20களில் முதலீடு செய்வதன் மூலம் அவரால் அதிக லாபத்தை பெற முடியும், நிதி பாதுகாப்பை உருவாக்க முடியும் என பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆனால், 30களின் முதலீடு செய்தும் பெரிய தொகையை உருவாக்க முடியும்.

20களில் முதலீடு செய்யவில்லை என்ற கவலை வேண்டாம்.. 30களில் முதலீடு செய்தும் பெரிய தொகையை உருவாக்கலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jul 2026 17:23 PM IST

சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்தால் தான் பொருளாதார பாதுகாப்பை பெற முடியும். எனவே ஒருவர் தனது 20களில் முதலீடு செய்வது, முதுமையில் அல்லது ஓய்வுக்கு பிறகு நல்ல பாதுகாப்பான பொருளாதாரத்தை பெற உதவியாக இருக்கும் என பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நம்மால் பார்க்க முடியும். ஆனால், பெரும்பாலான மக்களால் தங்களது 20களில் முதலீடு செய்ய முடியாமல் போய்விடும். இதன் காரணமாக அவர்கள் தாங்கள் பெரிய நிதி தவறை செய்துவிட்டதாக நினைப்பார்கள். ஆனால், 30களில் முதலீடு செய்வதும் சிறந்த பொருளாதாரத்தை பெற உதவியாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?.

30களில் சேமித்து பெரிய தொகையை உருவாக்க முடியும்

நீங்கள் உங்கள் 30களில் உள்ளீர்கள் ஆனால், உங்களது 20களில் முதலீடு செய்யவில்லையா. அது குறித்து கவலைப்பட தேவையில்லை. 30களில் முதலீடு செய்து கூட பெரிய தொகையை உருவாக்க முடியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

30களில் முதலீடு செய்வதற்கான சிறந்த மந்திரம்

ஒருவர் தனது 30 வயதை அடையும்போது அவரது வாழ்க்கையில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக 30களில் ஒருவரின் சம்பளம் நல்ல வளர்ச்சியை பெற்றிருக்கும். அதே சமயம் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளும் பெரிய அளவில் அதிகரித்திருக்காது. இதன் காரணமாக அந்த நபரிம் 20களின் இருப்பதை விட சற்று அதிக பணம் இருக்கும். இதன் காரணமாக இதுதான் முதலீடு செய்வதற்கான சிறந்த காலம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : மேம்படுத்தப்பட்ட IRCTC இணையதளம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

கூட்டு வட்டி திட்டங்களில் வருமானத்தை விரைவாக பெரிதாக்கலாம்

அவ்வாறு 30களில் கையில் இருக்கும் பணத்தை முறையாக முதலீடு செய்வதன் மூலம் 20களில் முதலீடு செய்தவர்களை விடவும் அதிக பணத்தை உருவாக்க முடியும். கூட்டு வட்டி கொண்ட திட்டங்களில் 20களில் முதலீடு செய்தவர்களுக்கு சற்று அதிகமான வருமானம் கிடைத்தாலும், ஒருவர் 30களில் முதலீடு செய்யும் பெரிய தொகையானது அந்த வித்தியாசத்தை மிக எளிதாக  ஈடுசெய்ய உதவி செய்யும்.

Follow Us