AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. ஒரு லிட்டர் பெட்ரோல் 100-ஐ தாண்டியது!

Petrol and Diesel Price Increased In Chennai | ஈரான் போர் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்து வந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே போர் வெடித்துள்ள நிலையில், மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. ஒரு லிட்டர் பெட்ரோல் 100-ஐ தாண்டியது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jul 2026 12:29 PM IST

சென்னை, ஜூலை 13 : சென்னையில் இன்று (ஜூலை 13, 2026) பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol and Diesel Price) உயர்ந்துள்ளது. அதாவது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.69 உயர்ந்துள்ள நிலையில், டீசல் லிட்டருக்கு ரூ.1.71  உயர்வை சந்தித்துள்ளது. ஈரான், மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை (Strait Of Hormuz) மூடுவதாக அறிவித்ததன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்கும் ஈரான் போர்

அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு அது இரண்டு நாடுகளுக்கும் இடையே போராக உருவெடுத்தது. இந்த நிலையில் தான், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் சிக்கின. இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்து வந்தது.

இதையும் படிங்க : ரேஷன் கார்டு பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

இதன் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகு ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது. இந்த நிலையில் தான், தற்போது மீண்டும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப் காபி, ஸ்கிரீன்ஷாட் ஆகியவை செல்லாது.. பயணிகளுக்கு இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!

மீண்டும் விலை உயர்வை சந்தித்த பெட்ரோல் மற்றும் டீசல்

சென்னையில் இன்று (ஜூலை 13, 2026) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.69 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.109.45-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.71 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.101.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் மேலும் நீடித்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலு உயரும் சூழல் உருவாகியுள்ளது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு சாமானியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us