ரேஷன் கார்டு பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க!
Ration Card Camp On July 11 | தமிழகத்தில் ரேஷன் அட்டை திட்டம் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாளை (ஜூலை 11, 2026) தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்தியாவில் உள்ள சமானிய மக்களுக்கான வரப்பிரசாதமாக உள்ளதுதான் ரேஷன் கார்டு (Ration Caard) திட்டம். இந்த திட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழஙப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையில் இருக்கும் நபர்கள் குறைந்த விலையில் உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். சாமானிய மக்கள் மட்டுமன்றி, இந்தியாவில் வசிக்கும் அனைத்து இந்திய குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் தான், ரேஷன் கார்டு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது விநியோக துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பொது விநியோக துறை வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், பெயர் சேர்ப்பு, முகவரி திருத்தம் மேற்கொள்ள வேண்டியவர்களுக்கான முக்கிய அறிவிப்பாக இது அமைந்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் மாதம்தோறும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வட்டத்திலும் ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும். அந்த வகையில் ஜூலை மாதத்திற்காக குறை தீர்ப்பு முகாம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : Gold Price : மீண்டும் மீண்டும் சரிவை சந்திக்கும் தங்கம்.. கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?




நாளை நடைபெறும் ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்
தமிழ்நாட்டில் நாளை ரேஷன் அட்டை குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் பயனர்கள் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும். அதாவது புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், குடும்ப அட்டையில் பெயர் சேத்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் நாளை ஒரே இடத்தில் பெற முடியும்.
இதையும் படிங்க : இனி பத்திரப்பதிவு செய்ய அலைய வேண்டாம்.. வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமே செய்யலாம்.. விரைவில் அமலுக்கு வருது!
ரேஷன் கார்டில் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் பயனர்களுக்கு சலுகைகள் கிடைக்காது என தொடர்ந்து அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில், கேஒய்சி சரிபார்ப்பும் இந்த முகாம்கள் மூலம் மேற்கொள்ளப்படும். எனவே பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ரேஷன் கார்டு தொடர்பான தங்களுக்கு தேவையான சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.