AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Hiked After 6 Days In Chennai | ஜூலை 03, 2026 முதலே தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், 6 நாட்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.

Gold Price : 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Jul 2026 10:43 AM IST

ஜூலை 10, சென்னை : ஜூலை மாதம் 3 ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை (Gold Price) தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், தற்போது 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று (ஜூலை 10, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏற்ற, இறக்கங்களோடு விற்பனை செய்யப்படும் தங்கம்

2026, ஜனவரி மாதம் முதலே தங்கம் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் நிலமை அப்படியே தலைகீழாக மாறியது. காரணம், ஜனவரி மாதத்தில் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் தங்கம், ஜூன் மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே நிலை நீடித்தால் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : Gold Price : 3 நாட்களில் ரூ.3,000 குறைந்த தங்கம் விலை.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

ஆனால், தங்கம் விலை மீண்டும் டிவிஸ்ட் அடித்தது. அதாவது, ஜூலை மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், ஜூலை 03, 2026-க்கு பிறகு மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கியது. அவ்வாறு தொடர்ந்து 6 நாட்கள் சரிவை சந்தித்த பிறகு தங்கம் விலை தற்போது மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,350-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us