AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் மீண்டும் சரிவை சந்திக்கும் தங்கம்.. கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?

Gold Price Reduced and Silver Price Remain Same | சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : மீண்டும் மீண்டும் சரிவை சந்திக்கும் தங்கம்.. கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jul 2026 10:41 AM IST

சென்னை, ஜூலை 09 : ஜூலை மாத தொடக்கத்தில் ஒருசில நாட்கள் தங்கம் விலை (Gold Price) உயர்வை சந்தித்த நிலையில், அதன் பிறகு கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த சகையில் இன்று (ஜூலை 09, 2026) தங்கம் விலை சரிந்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 சரிந்துள்ளது. வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை – காரணம் என்ன?

ஜூன் மாதம் முழுவதும் தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம், ஜூலை மாத தொடக்கத்தில் ஒருசில நாட்கள் உயர்வை சந்தித்தது. அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்வை சந்திக்க தொடங்கியது. அதாவது, ஜூலை 03, 2026 அன்று முதலே தங்கம் சரிவை சந்தித்து வருகிறது. தங்கம் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பட்சத்தில் ஒரு கிராம் ரூ.13,000-க்கு கீழ் செல்லும் என எதிர்பர்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க : மீண்டும் போர் பதற்றம்… கச்சா எண்ணெய் விலை சர்ரென அதிகரிப்பு

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,222-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us