AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : பிஎஃப் உச்ச வரம்பு ரூ.25,000.. மத்திய அரசு எடுத்த முடிவு.. வெளியான முக்கிய தகவல்!

EPFO 25,000 Wage Ceiling Hike On Hold | மத்திய அரசு பிஎஃப் உச்ச வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், பிஎஃப் உச்ச வரம்பை ரூ.25,000 உயர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

EPFO : பிஎஃப் உச்ச வரம்பு ரூ.25,000.. மத்திய அரசு எடுத்த முடிவு.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Jul 2026 15:45 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது பிஎஃப் (PF – Provident Fund) திட்டத்தின் கீழ் ரூ.15,000 ஆக உள்ள சம்பள வரம்பை மத்திய அரசு ரூ.25,000 ஆக உயர்த்த உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தான், அது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பிஎஃப் உச்ச வரம்பை ரூ.25,000 ஆக உயர்த்துவதற்கான ஆலோசனைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க காரணம் என்ன?

மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில், பிஎஃப்  சம்பள உயர்வையும் உயர்த்தும் பட்சத்தில் நிறுவனங்களுக்கு மேலும் கூடுதல் செலவு ஏற்படும் சூழல் உருவாகும். இதன் காரணமாக தான், மத்திய அரசு பிஎஃப் சம்பள வரம்பை உயர்த்தும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மணி கண்ட்ரோல் கூறுகிறது.

இதையும் படிங்க : EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

தற்போதைக்கு சம்பள வரம்பை உயர்த்தும் திட்டம் இல்லை

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இபிஎஃப் 2026-ல் பிஎஃப் சம்பள வரம்பு ரூ.15,000 ஆகவே உள்ளது. இந்த சம்பள வரம்பை அரசு உயர்த்தவில்லை. அதனை உயர்த்துவதற்கான வாய்ப்பும் தற்போது இல்லை என்பதை அரசின் இந்த முடிவு காட்டுகிறது. இதன் காரணமாக தற்போது ஒருவர் ரூ.15,000-க்கு மேல் சம்பள வாங்கினாலும், பிஎஃப் பங்களிப்பில் அவரின் வரம்பு ரூ.15,000 ஆகவே இருக்கும்.

இதையும் படிங்க : ரேஷன் கார்டு பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

அரசு இந்த பிஎஃப் உச்ச வரம்பை அதிகரிக்கும்போது அது நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, ஊழியர்களுக்கும் நிதி சுமையை அதிகரிக்கும். அதாவது, ஊழியர்களின் கையில் கிடைக்கும் பணத்தின் அளவு குறையும். ஆனால், பிஎஃப் கணக்கில் ஊரியர் மற்றும் நிறுவனம் சார்பில் வரவு வைக்கப்படும் பணத்தின் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us