Team India: 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் – கோலிக்கு இடம் உண்டா? கில் ஓபன் டாக்!
ICC ODI World Cup 2027: உலகக் கோப்பை அடுத்த ஆண்டு அதாவது 2027-ல் நடைபெற உள்ளது. எனவே, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்ற கேள்வி விளையாட்டு ரசிகர்களிடையே எழுகிறது. ஏனெனில், பிசிசிஐ இந்த இருவர் குறித்தும் தெளிவாக எதுவும் கூறவில்லை.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார். ஏனெனில், இந்த 2 வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள். மேலும் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு அதாவது 2027-ல் நடைபெற உள்ளது. எனவே, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்ற கேள்வி விளையாட்டு ரசிகர்களிடையே எழுகிறது. ஏனெனில், பிசிசிஐ இந்த இருவர் குறித்தும் தெளிவாக எதுவும் கூறவில்லை. இதில், இந்தியா (Indian Cricket Team) மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 ஜூலை 14ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்னதாக, சுப்மன் கில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ALSO READ: 967 நாட்களுக்குப் பிறகு முதல் முறை! இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் நடக்கப்போகும் சம்பவம்!
சுப்மன் கில் என்ன சொன்னார்?
இந்திய கேப்டன் சுப்மன் கில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “கடந்த பத்தாண்டுகளாக விராட்டும் ரோஹித்தும் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர். அவர்கள் எங்கள் அணியின் ஒரு முக்கிய அங்கம். இருவரின் அனுபவமும், அவர்கள் அணிக்குக் கொண்டுவரும் திறமைகளும் விலைமதிப்பற்றவை. கடந்த 10 ஆண்டுகளில் வெவ்வேறு சூழ்நிலைகளிலும், வெவ்வேறு போட்டிகளிலும், வெவ்வேறு தொடர்களிலும், வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் கோலி மற்றும் ரோஹித் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதன்படி, நெருக்கடியான சூழ்நிலைகளில் அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.




நீங்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சூழ்நிலைகளில் இருக்கும்போது, நல்லதும் கெட்டதும் செய்திருப்பீர்கள். இந்திய அணி தனது அனுபவமிக்க வீரர்களை மாற்ற விரும்பவில்லை. அதேநேரத்தில், இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்க விரும்புகிறது. இந்த அணி நிலையற்றது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் இளம் வீரர்கள் அனுபவம் பெறுவதற்காக அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க விரும்புகிறோம்” என்றார்.
ALSO READ: மழையால் இந்தியா – இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி ரத்தா? வானிலை நிலவரம் என்ன..?
பும்ராவைப் பற்றி கில் என்ன சொன்னார்?
பும்ரா பற்றி சுப்மன் கில் கூறுகையில், “ஜஸ்பிரித் பும்ரா சிறிது காலத்திற்குப் பிறகு அணிக்குத் திரும்புகிறார். இந்த ஒருநாள் தொடருக்கு முன்பு அவர் போதுமான அளவு பந்துவீசியிருப்பார் என்று நம்புகிறேன். இந்தத் தொடர் அவருக்குச் சாதகமாக அமையும் என்றும், நாங்கள் வெற்றியுடன் இதை முடிப்போம் என்றும் நம்புகிறோம்.” என்றார்.