IND vs ENG: முதல் ஒருநாள் போட்டியில் முத்திரை பதிக்குமா இந்தியா.. இங்கிலாந்துக்கு எதிராக இன்று மோதல்!
IND vs ENG 1st ODI: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. தற்போது இந்தியா தனது 4வது தொடர்ச்சியான தொடர் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவும், இங்கிலாந்தும் கடைசியாக கடந்த 2025 பிப்ரவரியில் ஒருநாள் தொடரில் மோதின. சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (IND vs ENG) இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று அதாவது 2026 ஜூலை 14ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியானது பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது. அனுபவ வீரர்களான விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா 6 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்காக இணைந்து விளையாட இருக்கின்றனர். காயம் காரணமாக விராட் கோலி ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார். டி20 தொடரில் தோல்வியுற்ற இந்திய அணி, ஒருநாள் போட்டிகளில் மீண்டு வர முயற்சிக்கும். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: விலகிய மெக்கல்லம்.. இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி இதுவரை எப்படி..?
இந்தியா இதுவரை இங்கிலாந்தில் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில், அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றும், 23 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி சமனிலும், இரண்டு போட்டிகள் முடிவில்லாமல் போயின. அதேநேரத்தில், இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை 110 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், இந்தியா 61 போட்டிகளிலும், இங்கிலாந்து 44 போட்டிகளிலும் வென்றுள்ளன. அதேபோல், 3 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்த நிலையில், 2 ஒருநாள் போட்டிகள் சமனில் முடிந்தன.




4வது தொடரை வெல்லுமா இந்தியா..?
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 3 ஒருநாள் தொடர்களை வென்றுள்ளது. தற்போது இந்தியா தனது 4வது தொடர்ச்சியான தொடர் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது. இந்தியாவும், இங்கிலாந்தும் கடைசியாக கடந்த 2025 பிப்ரவரியில் ஒருநாள் தொடரில் மோதின. சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. கடந்த 2022 ஜூலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரையும் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றன. அப்போது, இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார்.
ALSO READ: 967 நாட்களுக்குப் பிறகு முதல் முறை! இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் நடக்கப்போகும் சம்பவம்!
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ்.
இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணி:
ஹாரி புரூக் (கேப்டன்), பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், ஜேம்ஸ் கோல்ஸ், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது, கஸ் அட்கின்சன், சாம் கர்ரன், லியாம் டாசன், டாம் பாண்டன், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத், அடில் ரஷித், ஜோஷ் டங்.