AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
EPFO

EPFO

EPFO என்பது Employees’ Provident Fund Organisation என்பதற்கான சுருக்கமாகும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு மத்திய அரசு அமைப்பு. EPFO அமைப்பு 1952ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் தொழிலாளர்களுக்கு அவரது ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.ஒரு ஊழியர் EPFO-வில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே, அவருக்கு ஒரு UAN (Universal Account Number) எண் வழங்கப்படும். இது அவரது பிஎஃப் கணக்கை நிர்வகிக்க உதவும். ஒரு ஊழியரின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்துக்கொள்ளப்படும். அதேபோல நிறுவனமும் அதே அளவிற்கான ஒரு தொகையை ஊழியரின் பெயரில் EPFO கணக்கிற்கு செலுத்தும். இந்த தொகைக்கு வட்டியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதம் பிடிக்கப்படும் இந்த தொகை அந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பின் பெரிய தொகையாக கிடைக்கும். இது பணி ஓய்வுக்கு பின் பொருளாதார சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். அதே போல, மருத்துவம், வீடு வாங்குதல், குழந்தை கல்வி போன்ற அவசர தேவைகளுக்கு பிஎஃப் கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்து பயன்படுத்த முடியும். EPFO தொடர்பான செய்திகளை நாம் காணலாம்

Read More

வங்கி கணக்கை போல PF கணக்குக்கும் Minimum Balance கட்டாயமா?.. இத கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

EPFO PF Minimum Balance Rules | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உள்ளது. இந்த நிலையில், வங்கி கணக்கை போலவே பிஎஃப் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை கட்டாயம் இருக்க வேண்டுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ முகாம்.. சிக்கல்களுக்கு உடனடி தீர்வு.. மிஸ் பண்ணீடாதீங்க!

EPFO Nidhi Aapke Nikat 2.0 Camps | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பல்வேறு சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர்கள் இபிஎஃப்ஓ தொடர்பான விளக்கங்கள் மற்றும் சேவைகளை பெற இன்று முகாம் நடத்தப்படுகிறது.

பிஎஃப் விதிகள்: வீடு கட்ட, கடன் செலுத்த பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?

EPF Withdrawal Rules : சில முக்கியத் தேவைகளுக்காக முன்கூட்டியே பிஎஃப் பணம் எடுத்துக்கொள்ளவும் வசதியை இபிஎஃப்ஓ நமக்கு வழங்குகிறது. குறிப்பாக வீடு வாங்குவது, கட்டுவது, வீட்டுக் கடனை அடைப்பது போன்ற முக்கிய தேவைகளுக்கும் பிஎஃப் பணத்தை பயன்படுத்த முடியும். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்ட PF உச்ச வரம்பு.. இனி இவை எல்லாமே மாறும்!

EPFO Wage Ceiling Hiked To 25000 Rupees | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் உச்ச வரம்பை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த நிலையில், இந்த உச்ச வரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

இபிஎஃப் ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு… 7 முக்கிய மாற்றங்கள்

New EPF Rules : பணியாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎஃப் திட்டத்துக்கான ஊதிய வரம்பை மத்திய அரசு ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பணியாளர்களுக்கு நடக்கும் 7 முக்கிய மாற்றங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : மாதம் மாதம் கணக்கில் பிஎஃப் பணம் முறையாக வரவு வைக்கப்படுகிறதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

How To Check PF Money | இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அவர்களது பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் பிஎஃப் பணம் வரவு வைக்கப்படும். அந்த பணம் முறையாக வரவு வைக்கப்படுகிறதா என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி என பார்க்கலாம்.

இனி EPFO குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளலாம்.. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்!

Employee Provident Fund Organization WhatsApp Channel | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய வாட்ஸ்அப் சேனல் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த வாட்ஸ்அப் சேனலின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, அதில் இணைவது எப்படி என பார்க்கலாம்.

EPFO : இனி On Time-ல் பிஎஃப் பணம் கைக்கு வரும்.. விதிகளை கடுமையாக்கிய இபிஎஃப்ஓ!

EPFO New Rules On PF Money Settlement | பிஎஃப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் ஊழியருக்கு உரிய நேரத்தில் பணம் சென்று சேர வேண்டும் என்பதை உறுதி செய்ய ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உரிய நேரத்தில் க்ளெய்ம் வழங்காததால் 6% வட்டி.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Interest For Delayed PF Claim To EPFO | பிஎஃப் பணத்தை எடுக்க ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் விண்ணப்பித்த நிலையில், அவருக்கு க்ளெய்ம் வழங்க கால தாமதமானதால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அவருக்கு 6 சதவீதம் வட்டி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலை, வருமானம் குறித்து கவலையா? EPFO-ன் இந்த 5 முக்கிய நன்மைகள்

EPFO Benefits You Should Know : தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, வேலை இழப்பு அல்லது குறைவான சம்பளம், திடீர் செலவுகள் போன்ற சூழ்நிலைகள் திடீரென நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். இபிஎஃப்ஓ திட்டத்தின் மூலம் மூலம் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள், நீண்ட கால நிதி பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும்

நொடி பொழுதில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. தீபாவளி பரிசாக வருகிறது இபிஎஃப்ஓ 3.0!

EPFO 3.0 Coming Soon | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பல்வேறு சிறப்பு அம்சங்களை ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில், யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் அம்சத்தை இபிஎஃப்ஓ விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இபிஎஃப்ஓ 3.0 அம்சம் எப்போது அமலுக்கு வரும்.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?

When Will EPFO 3.0 Will Come For Use | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ 3.0 அம்சம் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

EPFO : EPS பென்ஷன் பெற தனியார் ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Qualification For Private Employees To Get EPS Pension | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் , இபிஎஸ் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தனியார் ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணி செய்தால் இபிஎஸ் பென்ஷன் திட்டத்தில் பயன்பெற முடியும் என பார்க்கலாம்.

வங்கி கடனை அடைக்க பிஎஃப் பணத்தை எடுக்கலாமா?.. விதிகள் கூறுவது என்ன?

Can You Take PF Money To Repay Bank Loan | பிஎஃப் பணம் ஏராளமான ஊழியர்களுக்கு முதன்மை சேமிப்பாக உள்ளது. இந்த நிலையில், பிஎஃப் பணத்தை எடுத்து வங்கி கடனை அடைக்க முடியுமா, அது குறித்து இபிஎஃப்ஓ விதிகள் கூறுவது என்ன என பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ அமைப்பு வழங்கும் காப்பீடு.. ரூ.7 லட்சம் வரை பெறலாம்.. முழு விவரம்!

EPFO Free Insurance | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனியார் துறை ஊழியர்களுக்கான சிறந்த அமைப்பாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஊழியர்களுக்கு காப்பீடு வழங்கும் அசத்தல் அம்சத்தையும் இபிஎஃப்ஓ வழங்குகிறது. இந்த அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.