சென்னை முழுவதும் சமீப நாட்களாக நூற்றுக்கணக்கான காகங்கள் மரணமடைந்துள்ள நிலையில், இதுதொடர்பான பரிசோதனையில் H5N1 என்ற பறவை காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பறவை காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அரசு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில், குறிப்பாக அடையாறு பகுதியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பறவைகள் மூலம் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்த காகங்கள் மற்றும் கோழிகளின் உடல்களை எரித்தோ அல்லது ஆழமாக குழிதோண்டி புதைத்தோ அழிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.