EPFO : இபிஎஃப்ஓவின் புதிய விதிகளால் உருவான குழப்பம்.. உண்மை இதுதான்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Employee Provident Fund Organization New Rules | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் பிஎஃப் பணம் எடுக்கும் விதிகளில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக உறுப்பினர்கள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த இபிஎஃப்ஓவின் புதிய விதிகள் கூறுவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) அவ்வப்போது சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தற்போது வரை உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுப்பதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பயனர்கள் எந்த விதி எந்த முறைக்கானது என தெரியாமல் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் 13 வகையான பணம் எடுக்கும் முறைகளுக்கு என்ன என்ன விதிகள் உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
13 வகைகளில் பகுதியாக பணம் எடுக்க அனுமதிக்கும் இபிஎஃப்ஓ
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தனது உறுப்பினர்கள் மொத்தம் 13 முறைகளில் பகுதியாக பணம் எடுக்க அனுமதி வழங்குகிறது. இந்த ஒவ்வொரு முறைக்கும் தனி விதி உள்ளது. அந்த விதிகளின் அடிப்படையில் தான் அந்த அம்சத்தில் பணம் எடுக்க முடியும். மொத்தம் 13 முறைகள் இருப்பதால் உறுப்பினர்கள் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில், அந்த 13 முறைகளை வெறும் 3 முறைகளாக பிரித்து அதற்கான விதிகள் எப்படி உள்ளன என்பது குறித்து மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Ration Card : இந்த விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்.. இல்லையெனில் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!




பணம் எடுக்கும் முறைகளை வெறும் 3 வைககளாக பிரிக்கலாம்
பிஎஃப் கணக்கில் இருந்து பகுதி அளவு பணத்தை எடுக்க 13 வகைகளுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அனுமதி வழங்கும் நிலையில் அவற்றை அத்தியாவசிய தேவைகள், வீட்டு தேவைகள் மற்றும் சிறப்பு தேவைகள் என மூன்று விதமாக பிரிக்கலாம். இபிஎஃப்ஓ குறைந்தபட்ச இருப்பு விதியை மாற்றியுள்ளது. அதன்படி, ஊழியர்கள் 25 சதவீதம் பணத்தை தங்களது பிஎஃப் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீத பணத்தை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : Aadhaar Card : பயோமெட்ரிக் அப்டேட்.. ஒரு ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.. UIDAI அசத்தல் அறிவிப்பு!
இபிஎஃப்ஓவின் இந்த புதிய விதிகள் அறிமுகமானது முதலே ஊழியர்கள் தங்களது பணியில் இருந்து வெளியேறிய பிறகு பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது என்ற வதந்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அது முற்றிலும் தவறானது. ஊழியர்கள் தாங்கள் பணியில் இருந்து விலகியதுமே தங்களது பிஎஃப் பணத்தில் இருந்து 75 சதவீதத்தை எடுத்துக்கொள்ளலாம். பணியில் இருந்து விலகிய 2 மாதங்கள் முதல் ஒரு ஆண்டுவரை அந்த உறுப்பினர்கள் மீண்டும் வேலையில் இணையாமல் இருந்தால் மீதமுள்ள 25 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். இதைதான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் புதிய விதிகள் கூறுகின்றன.