நாளை முதல் உணவகங்கள் செயல்படாது.. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூரில் நடவடிக்கை!
Hotels Will Not Run From March 10, 2026 In Bengaluru | ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெங்களூரில் நாளை முதல் உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
பெங்களூரு, மார்ச் 09 : ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், உலக அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூரில் (Bengaluru) உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிப்பட்டுள்ளன. இதன் காரணமாக உணவகங்களை நம்பியுள்ள பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூரில் ஓட்டல்கள் மூடப்படுவதாக அறிவிப்பு
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர் தாக்குதல் நடத்தி வருவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. உலகின் 5-ல் 1 பங்கு எண்ணெய் இந்த நீரிணை வழியாக தான் மற்ற உலக நாடுகளுக்கு செல்கிறது. தற்போது இந்த நீரிணை மூடப்பட்டுள்ள நிலையில், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அதிகரித்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 150 அமெரிக்க டாலர்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.13,841 ஆகும்.
இதையும் படிங்க : உலகளவில் நிலவும் பதற்றங்கள்.. எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமையும்.. பல்வழி இறக்குமதியும்.. முழு விவரம்




தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை
உலக அளவில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் சமீபத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.150 உயர்ந்தது. சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.150 தள்ளுபடியும் நிறுத்தப்பட்டதால் உணவக உரிமையாளர்கள் கடும் சவாலை எதிர்க்கொண்ட வேண்டிய நிலை இருந்தது. அதாவது அவர்கள் கூடுதலாக ரூ.265 செலுத்த வேண்டி இருந்தது.
இதையும் படிங்க : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையா? – நிபுணர்கள் விளக்கம்
இத்தகைய கடுமையான சூழலில் பெங்களூரில் நாளை (மார்ச் 10, 2026) முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது உணவகங்களை நம்பியுள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.