AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெபாசிட் கூட வாங்க முடியாது – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்

தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 நாளை தாக்கல் செய்யப்டவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் ஆகஸ்ட் 4, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டார்.

டெபாசிட் கூட வாங்க முடியாது – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்
உதயநிதி - ஆதவ் அர்ஜூனா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Aug 2026 21:11 PM IST

சென்னை, ஆகஸ்ட் 5 : தமிழக அரசின் பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 நாளை தாக்கல் செய்யப்டவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் ஆகஸ்ட் 4, 2026 இன்று நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டார். இதுகுறித்து பேசிய அவர், உங்கள் அடையாளங்களை தூக்கி வைத்து விட்டு வாருங்கள் உதயநிதி, உங்களை எதிர்த்து எங்கள் தலைவர் சாமானிய பெண் ஒருவரை நிற்க வைத்து இதே சேப்பாக்கம் தொகுதியில் வென்று காட்டுவோம். உங்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்றார்.

உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்

மேலும் பேசிய அவர், பெண்களை கடவுளாக பேசுவதை விட சமத்துவமாக பேச வேண்டும். பெண்களை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். திமுகவினர் தனிப்பட்ட தாக்குதல்களை செய்கின்றனர். தவெக எம்எல்ஏக்களிடம் செந்தில் பாலாஜி பேரம். 70 வருட பாரம்பரிய கட்சியின் தலைவர் கொளத்தூரில் தோல்வி. கடந்த தேர்தலில் சேப்பாக்கம் ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது. திமுகவின் தோல்விக்கு பண்ணையார்தனம் தான் காரணம் என்றார்.

இதையும் படிக்க : உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

மேலும் பேசிய அவர், திமுகவுக்கு முதலமைச்சர் விஜய் பாடம் எடுத்துள்ளார். எம்ஜிஆர் இருக்கும் வரை திமுகவால் வெல்ல முடியவில்லை. முதலமைச்சர் விஜய் பெண்களை தரக்குறைவாக, அவதூறாக பேசியதில்லை என்றார்.
பெண்களை யார் விமர்சித்தாலும் கைது செய்யப்படுவர். உதயநிதியை ஆபாசநிதி என்றுதான் அழைக்க வேண்டும். தவறாக எதுவும் பேசவில்லை என்று கூறும் உதயநிதி, அந்த பேச்சை அவரது அம்மா, மகள் முன்பு பேச முடியுமா? உதயநிதி ஸ்டாலின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றார்.

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது தவெக மகளிரணி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் ஆகஸ்ட் 4, 2026 இன்று காலை கைது செய்தனர்.

95682

அவரை கைது செய்து தஞ்சாவூர் அழைத்து சென்றனர். இதற்கிடையில் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்திய பிறகு அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது இதனிடையே உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us