பாரத் ஸ்டேஜ்6 தரநிலைக்கு உட்பட்ட, ஆறு ஆண்டுகளுக்கு உட்பட்ட தனியார் வாகனங்களுக்கான மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை தற்போதைய ஒரு ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, 6 ஆண்டுகளுக்கு குறைவான BS6 வாகனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே PUCC புதுப்பித்தால் போதும். 6 முதல் 10 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு அதைவிட அடிக்கடி பரிசோதனை கட்டாயமாகும்.