AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பேசியதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பதிவிட்ட மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆபாசமாக எதுவும் பேசவில்லை. ஆவணம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்
உதயநிதி ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Aug 2026 17:25 PM IST

சென்னை, ஆகஸ்ட் 4 : தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு பேசியதாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் 4, 2026 இன்று தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இதனை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு பிறகு இன்றைக்குள் அவர் விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெகவின் பாசிசத்துக்கு விழுந்த முதல் அடி என குறிப்பிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

உதயநிதி ஸ்டாலினின் கைது தொடர்பாக பதிவிட்ட மு.க.ஸ்டாலின், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதன் மூலம் உதயநிதியை மிரட்டப் பார்க்கிறார்கள்; உதயநிதி ஆபாசமாக எதுவும் பேசவில்லை. ஆவணம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும்; விசாரணை நோக்கமெனில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே நீதிமன்றத் தீர்ப்பு பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி. தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான திமுகவினரை உடனே விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு… முழு விவரம்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, தவெக அரசின் அலட்சிய ஆணவப் போக்கைக் கண்டித்து தஞ்சை கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, த.வெ.க. அரசின் கையாலாகாத்தனத்தை அம்பலப்படுத்தினார்.

மேலும், நிர்வாகத் திறனற்ற டம்மி முதலமைச்சரால் காவிரி நீரைக் கொண்டுவர முடியவில்லை, மேகதாது அணையைத் தடுக்க பேசவும் முடியவில்லை, விவசாயிகள் வேதனையில் கண்ணீர் வடிக்கையில், அமைச்சர்கள் முதலமைச்சர் நடித்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜோக்கர் அமைச்சரவை தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் வைத்தார். இதற்கு இதுவரை ஆட்சியாளர்களால் பதில் சொல்ல முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரச்சினையைத் திசைதிருப்ப எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை, அவரை அராஜகமாகக் கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றுள்ளது. நாளை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருக்கக் கூடாது என்று நினைத்து இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, ‘கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்’ என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? ‘உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி! என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகத்தான் பார்க்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்

மேலும், ஆட்சிக்கு வந்தது முதல் தன்னையும் தனது அமைச்சர்களையும், ஆட்சியையும் விமர்சிப்பவர்களைக் கைது செய்யும் ஒரே வேலையைத்தான் முதலமைச்சர் விஜய் பார்த்து வருகிறார்.
உதயநிதி தனது உரையில் ஆபாசமாக ஏதும் பேசவில்லை. யாரையும் குறிப்பிடவில்லை. அவர் பேசாத ஒன்றை பேசியதாகச் சிலர் பரப்பியதைச் சரிபார்க்காமல் அரசியல் தலைவர்கள் சிலர் உதயநிதியைக் கண்டிப்பது பிரச்சினையை திசைதிருப்புவது ஆகும். உதயநிதி தவறுதலாகப் பேசுகிறவர் அல்ல. அப்படியே தவறுதலாகப் பேசினாலும், உடனடியாக மன்னிப்பு கேட்கும் இயல்புடையவர். தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகக் கைது செய்துள்ள கழக உடன்பிறப்புகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்! ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us