AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து காவல்நிலைய ஜாமீனில் அவர் வெளியே அனுப்பப்படுவார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு
உதயநிதி ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Aug 2026 14:54 PM IST

சென்னை, ஆகஸ்ட் 4 : எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்குள் விசாரணையை முடித்து இன்றே உதயநிதியை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து காவல்நிலைய ஜாமீனில் அவர் வெளியே அனுப்பப்படுவார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை இன்றுக்குள் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு எதிராக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலினை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை.  உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் அழைத்து செல்லப்படுகிறார். காவல் நிலைய விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்.

இதையும் படிக்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்ப்பதாக மிரட்டல்.. தொழிலதிபரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம்… இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!

மேலும், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை காவல் நிலைய ஜாமீனில் அவர் வெளியே அனுப்பப்படுவார் என தெரிவித்தார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்குப் பின் இன்றே விடுவிக்க வேண்டும் என்றும்  அதேவேளையில் உதயநிதியும் காவல் துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தஞ்சை செல்லும் வழியில் விழுப்புரம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மதிய உணவு மற்றும் இயற்கை உபாதைக்காக ஒலக்கூர் காவல் நிலையத்தில் தற்காலிகமாக உதயநிதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சாவூரில் ஆகஸ்ட் 4, 2026 காவிரி விவகாம் தொடர்பாக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும்படிக்க :  இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாகத்தான் பார்க்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4, 2026 இன்று காலை அவரது வீட்டுக்கு தஞ்சை போலீஸார் வந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவானதால் போலீஸார் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் காவல்துறையினர் உதயநிதியை அழைத்துச் சென்றனர். இதனால் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோலவே, தவெகவினரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் இன்றைக்குள் விடுவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us