AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைகை ஆற்றில் இருக்கும் மாசு விட மோசமானது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு – அண்ணாமலை விமர்சனம்..

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அண்ணாமலை, "நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்யும்போது, இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா என நினைத்தேன். பிறகு உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், வைகை ஆற்றில் இருந்த மாசை விட உதயநிதி ஸ்டாலினின் பேச்சே மிகவும் கீழ்த்தரமானது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வைகை ஆற்றில் இருக்கும் மாசு விட மோசமானது உதயநிதி ஸ்டாலினின் பேச்சு – அண்ணாமலை விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 04 Aug 2026 10:40 AM IST

ஆகஸ்ட் 4, 2026: காவிரி நீர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு வீ த லீடர் (We The Leader) அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை மறைமுகமாக கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அண்ணாமலை, “நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்யும்போது, இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா என நினைத்தேன். பிறகு உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், வைகை ஆற்றில் இருந்த மாசை விட உதயநிதி ஸ்டாலினின் பேச்சே மிகவும் கீழ்த்தரமானது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் தரமற்ற பேச்சு:

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சையில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், திமுக மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் என்றும் விமர்சித்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை திரிஷாவின் பெயரை முழக்கமிட்டனர். இதையடுத்து சிரித்தபடி பேசிய உதயநிதி ஸ்டாலின், “தண்ணீர் வேறு எங்கு போனாலும் பரவாயில்லை; தண்ணீர் சேர வேண்டிய இடத்தில் சேர வேண்டும்” என்று கூறிவிட்டு, பின்னர் “நான் காவிரி தண்ணீரைத்தான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்தார்.

மேலும் படிக்க: காவிரி போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனங்கள்..

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உதயநிதியின் பேச்சு தரமற்றது, அருவருப்பானது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வைகை ஆற்றில் இருக்கும் மாசு விட மோசமானது – அண்ணாமலை விமர்சனம்:


தமிழக வெற்றிக் கழகமும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அண்ணாமலையின் சமூக வலைதளத்தில், நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்யும்போது, இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா என நினைத்தேன். பிறகு உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கேட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், வைகை ஆற்றில் இருந்த மாசை விட உதயநிதி ஸ்டாலினின் பேச்சே மிகவும் கீழ்த்தரமானது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்

Follow Us