AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீருடை கட்டாயம்.. “டாஸ்மாக் கடைகளில் இனி புது லுக்கில் ஊழியர்கள்”.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

TASMAC Employees to Get Uniforms: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நவம்பர் 15-ஆம் தேதி முதல் சீருடை கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்காக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் சீருடைத் தொகையாக ஆண்டுக்கு ₹6,000 வரவு வைக்கப்படவுள்ள நிலையில், மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான பிரத்யேக சீருடை வண்ணங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சீருடை கட்டாயம்.. “டாஸ்மாக் கடைகளில் இனி புது லுக்கில் ஊழியர்கள்”.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
டாஸ்மாக் சீருடை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Sep 2026 07:24 AM IST

சென்னை, செப்.20: தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், அவர்களுக்குக் குறிப்பிட்ட அடையாளம் மற்றும் கண்ணியமான தோற்றத்தை அளிக்கவும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சீருடை வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான நிதியுதவி மற்றும் ஆடை வண்ணக் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!

ஆண்டுக்கு ரூ.6,000 சீருடைத் தொகை:

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் (Supervisors), விற்பனையாளர்கள் (Salesmen) மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு (Assistant Salesmen) இந்தச் சீருடைத் திட்டம் பொருந்தும். ஊழியர்கள் மூன்று செட் சீருடைகள் தைத்துக் கொள்வதற்காக, ஒரு செட்டிற்கு ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.6,000 சீருடைத் தொகையாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. மேலும், இந்தச் சீருடைகளுக்கான துணிகளை மாவட்டத் தலைநகரங்களில் உள்ள ‘கோ-ஆப்டெக்ஸ்’ நிறுவனத்தின் விற்பனையகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பதவிக்கேற்ப பிரத்யேக சீருடை நிறங்கள்:

டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பதவிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் வெவ்வேறு வண்ணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு லேசான நீல நிற சட்டையும், அடர் நீல நிற பேண்ட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு டார்க் பேஜ் நிறச் சட்டையும், அடர் சாம்பல் நிற பேண்ட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சீருடைகளின் நெஞ்சுப் பகுதியில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இலச்சினை இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “தலித் மாணவர்கள் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது!”.. அமைச்சர் வன்னியரசு பகீர் குற்றச்சாட்டு!!

கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்:

அலுவலக வேலை நேரங்களில் ஊழியர்கள் அனைவரும் முறையான தூய்மையான சீருடையை அணிந்து பணிபுரிவதை மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீருடை அணியாமல் பணிக்கு வரும் ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீருடை நடைமுறையானது, டாஸ்மாக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஊழியர்களின் அணுகுமுறையை மேலும் முறைப்படுத்தவும், விற்பனை மையங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us