AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளி மற்றும் தசரா பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – முன்பதிவு எப்போது?

Dussehra - Diwali Special Trains : தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதையொட்டி, அதிக அளவு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணிப்பார்கள் என்பதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

தீபாவளி  மற்றும் தசரா பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு  – முன்பதிவு எப்போது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Sep 2026 21:03 PM IST

சென்னை, செப்டம்பர் 19 : தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதையொட்டி, அதிக அளவு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பணிப்பார்கள் என்பதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் திருவனந்தபுரம், கோவை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது கூடுதல் சிறப்பு. இந்த ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 20, 2026 நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

திருவனந்தபுரம் வடக்கு – சந்திரகாசி

திருவனந்தபுரம் வடக்கில் இருந்து சந்திரகாசிக்கு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. சந்திரகாசியில் இருந்து திருவனந்தபுரம் வடக்குக்கு 2026 அக்டோபர் 5, 12, 19, 26 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் மறுமார்க்க சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

திருவனந்தபுரம் சென்ட்ரல் – ராஜஸ்தானின் மதார்

திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தானில் உள்ள மதாருக்கு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல மறுமார்க்கத்தில் மதாரில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 24, 31 மற்றும் நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் கொல்லம், செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், கண்ணூர், உடுப்பி, அஜ்மீர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும்.

போத்தனூர் – பீகாரின் ப்ரௌனி

போத்தனூரில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 4, 11, 18, 25 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதே போல மறுமார்க்கத்தில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கு அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் மறுமார்க்க ரயில் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather now : உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

எர்ணாகுளம் – பாட்னா

எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல மறுமார்க்கமாக பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்துக்கு 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 6, 13, 20, 27 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில் பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர் உள்ளிட்ட நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.

பண்டிகை கால பயணத்தை திட்டமிடும் பயணிகள், ரயில் இயக்கப்படும் தேதி மற்றும் முன்பதிவு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான irctc.co.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Follow Us