மதுராந்தகம்-தாராபுரம் இடைத்தேர்தல்.. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
Maduranthakam-Dharapuram By Election Candidates List : தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதி இடைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 6- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி இன்றாகும். இதற்கான நேரம் 3 பணிவுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 28 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 27- ஆக உள்ளது.
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் . . .
இதே போல, தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 14 சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளது. இதில், மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரகதம் குமரவேல், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வழக்கறிஞர் பரந்தாமன், அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் படிக்க: பழனி, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கைவரிசை.. ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு?
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் . . .
இதே போல, தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சத்தியபாமா, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சுகன்யா, அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9- ஆம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள்
கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. செப்டம்பர் 17- ஆம் தேதி வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது தொடர்ந்து, இன்று வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 6- ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அக்டோபர் 9- ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!