கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண் கொலை சம்பவம்.. ரூ.20 ஆயிரத்தை எடுத்ததால் கொன்றேன்.. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!
Kanyakumari Women Murder : கன்னியாகுமரியில் லாட்ஜில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரனையில் அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்து உள்ளார். அது என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம், மேல கிருஷ்ணன் புதூர் அருகே உள்ள ஆத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் செல்வி ( 50 வயது). இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், செல்வியை கொலை செய்ததாக ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் ( 31 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரை, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்ததில், பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். இதில், நான் சென்னையில் வாடகை கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறேன். சவாரி இல்லாத நாட்களில் வெளியூர் சென்று வருவது வழக்கம் ஆகும்.
லாட்ஜில் ரூ. 20 ஆயிரத்தை திருடிய பெண்
அவ்வாறு, கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தேன். அப்போது, வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கே இருந்த செல்வி என்ற பெண் எனக்கு அறிமுகம் ஆனார். உடனே நாங்கள் இருவரும் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அரை எடுத்து தங்கி இருந்தோம். அப்போது, அறையில் உள்ள பாத்ரூமில் நான் குளித்துவிட்டு வெளியே வந்த போது எனது பையில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை செல்வி திருடினார்.
மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி பயங்கரம்.. மாணவர்-மாணவி பலி.. கரூரில் சோகத்தில் முடிந்த பயணம்!
தலையணையால் அமுக்கி கொலை செய்தேன்
இதை அறிந்த நான் அந்த பணத்தை தருமாறு செல்வியிடம் கேட்டேன். அதற்கு, உன்னிடம் அதிகமாக பணம் உள்ளது. எனக்கு குறைவாக பணம் தருகிறாய் என்று கூறி என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், எங்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில், ஆத்திரம் அடைந்த நான் செல்வியை கீழே தள்ளி தலையணையால் அவரது முகத்தை அமுக்கினேன். இதில், அவர் மயங்கினார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
பின்னர், அவரது காதில் அணிந்திருந்த கமலை திருடிவிட்டு பேருந்து மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு தப்பி சென்று விட்டேன். கோயம்புத்தூர் தப்பி சென்ற என்னை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கைது செய்து விட்டனர். நான் தலையணையால் அமுக்கியதில் செல்வி மயங்கி விட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவர் உயிரிழந்தது போலீசார் தெரிவித்த பின்னர் தான் எனக்கு தெரியும் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: பழனி, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கைவரிசை.. ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு?