AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பழனி, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கைவரிசை.. ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு?

Srirangam Temple Land Encroachment : திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில் திமுக நிர்வாகி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பழனி, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கைவரிசை.. ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு?
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Sep 2026 13:13 PM IST

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ அரங்கநாத ஸ்வாமி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக ரூ. 50 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் மூலமாக திமுக நிர்வாகி ராம்குமார் உள்ளிட்டோர் ஆக்கிரமித்ததாக புகார் அளித்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கடந்த 1930- ஆம் ஆண்டு பொது பணிக்காக நிலம் எழுதி வைக்கப்படுகிறது. ரூ. 50 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த 2022- ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாகவும், அந்த நிலத்தில் திமுக கட்சி அலுவலகம் கட்டப்பட்டு நடத்தப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது.

திமுக நிர்வாகி உள்பட 6 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக, கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், திமுக பகுதி செயலாளராக இருந்து வரும் ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த வழக்கில், திமுக நிர்வாகி ராம்குமார் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கோவில் நில ஆக்கிரமிப்பு பின்னணியில் கோழி ஆவணங்கள் தயாரிக்க உதவிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகின்றன.

மேலும் படிக்க: சேலத்தில் அடுத்தடுத்து கொலை- தற்கொலை.. பகீர் கிளப்பும் பின்னணி.. போலீசார் தீவிர விசாரணை!

திமுக முன்னாள் அமைச்சர்- அதிகாரிகளுக்கு தொடர்பு

இதனால், ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளதுடன், திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்த சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இரு சார் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் நிலத்தை விற்ற முருகதாஸ் மற்றும் நிலத்தை பெற்றவர்கள், நிலத்தை பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பழனி, மதுரையை தொடர்ந்து திருச்சியில் கைவரிசை

அவர்களிடம், சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதனிடையே, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மோசடி செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இதில், சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பெரிய பூகம்பம் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மதுரையில் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு.. அரசு பள்ளி பின்புறம் கிடந்த இளைஞர் சடலம்.. பரபரக்கும் பின்னணி!

Follow Us