Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Seeman

Seeman

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் தனித்துவமான பாதையை உருவாக்கியவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் 1966 ஆம் ஆண்டு பிறந்த அவர், திரைப்பட இயக்குநராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும், தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 2000களின் தொடக்கத்தில் இலங்கை தமிழருக்கு ஆதரவாகவும், தமிழ் இன உணர்வுக்காகவும் வலியுறுத்திய அவர், 2010 ஆம் ஆண்டு “நாம் தமிழர் கட்சி”யை நிறுவினார். அவர் வகிக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழியாக, கட்சியின் முக்கியக் கொள்கைகளை வெளிப்படுத்தி வருகிறார். சீமான் தமிழ்நாட்டின் மரபு, மொழி, விவசாயம், நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தீவிர அரசியல் பேச்சாளராக செயல்படுகிறார்.தமிழ்த் தேசியம் மற்றும் மக்கள் நல அரசியல் என்ற தளத்தில் அவரது பயணம் இன்று பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் தனித்து களம் கண்டு வருகிறார். 2025 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. சீமான், நாம் தமிழர் கட்சி தொடர்பான செய்திகளை நாம் இங்கு காணலாம்.

Read More

இளைஞர்களை திசை திருப்பவே சீமானின் இந்த கோமாளித்தனம் – விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு..

Vanni Arasu On Seeman: சீமான் இதுவரை சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக போராட்டமோ, மாநாடு நடத்தியதில்லை. ஆனால் ஆணவ படுகொலைகள் ஆதரித்தும் கொடி பெருமை ஆதரித்தும் பிதற்றி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாலர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

எதற்காக தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும்..? சீமான் கேள்வி..!

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 16ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “எதற்காக தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டும்..? ஹிந்தி திணிப்பை எதிர்க்கவா..? வட இந்தியர்களின் ஆதிக்கத்தை தடுக்கவா..? திராவிட கட்சிகள் செய்த அரசியலை மட்டும்தான் செய்யும் சேவை அரசியலோ செயல் அரசியலையோ செய்யாது அது அதற்கு தெரியாது.” என்று தெரிவித்தார்.

குரூப் 4 தேர்வை ரத்து செய்யுங்கள்… தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Controversy over TNPSC Group 4 Exam: தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் தமிழ் பகுதி கடினமாகவும், பாடத்திட்டத்திற்கு வெளியான கேள்விகளாகவும் இருந்தது என்று தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். சீமான், இது தமிழில் படித்தவர்களை போட்டியிலிருந்து விலக்கும் சூழ்ச்சி எனக் கண்டனம் தெரிவித்தார்.

ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும்.. மதுரையில் நடந்த மாநாட்டில் சீமான் பேச்சு..

Naam Tamilar Party Leader Seeman: ஜூலை 10, 2025 அன்று மதுரை விராதனூரில் ஆடு மாடுகளுடன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாநாட்டை நடத்தினார். அப்போது மேடையில் பேசிய அவர், ஆடு மாடுகளுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கேட்பதாக தெரிவித்திருந்தார்.

விஜயுடன் பயணிப்பது கடினம்.. தனித்து நின்று தான் போட்டி – சீமான்..

Seeman - Vijay: 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்காது என கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜயுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் எங்களுடைய அரசியல் பெரியார் இல்லாத அரசியல் எனவும் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி நடத்தும் ஆடு மாடுகள் மாநாடு.. மதுரை விராதனூரில் ஏற்பாடுகள் தீவிரம்..

NTK Leader Seeman: மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பின் கீழ் ஜூலை 10 2025 ஆம் தேதியான இன்று மாலை மதுரை விராதனூர் அருகே, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா மீது ஏன் விசாரணை இல்லை? – சீமான் காட்டம்..

Naam Tamilar Party Seeman: கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதா மீது ஏன் இன்னும் காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளவில்லை, விசாரணையை தனிப்படைக்கு மாற்றிய அதிகாரி யார் என்பது தெரிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காவல் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் மீது கொலை வழக்கு பதியுங்கள்! – சீமான் வலியுறுத்தல்

Police Custody Death: திருப்புவனத்தில் காவல்துறையினர் விசாரணையின் போது தம்பி அஜித் உயிரிழந்ததை சீமான் கடுமையாக கண்டித்து, சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரது குடும்பத்துக்கு வேலை மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நடிகர் ஸ்ரீகாந்த் பாவம் என்பதே என்னுடைய கருத்து – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Seeman: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பதை குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஸ்ரீகாந்த் பாவம் என்பதே என்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் தொடர்பாக அரசு நினைத்தால் அதனை தடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Seeman’s Palm Tree Climb: பனை ஏறி கள் இறக்கிய சீமான்.. அடுத்த போராட்டம் குறித்தும் பகிரங்க அறிவிப்பு!

Naam Tamilar Katchi's Toddy Protest: தமிழகத்தில் பனைமரத்தில் கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். பனை மரத்தில் ஏறி கள் இறக்கி, தடையை கண்டித்தார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, வனத்தில் மேய்ச்சலுக்கு உள்ள தடையையும் எதிர்த்து, ஆடு மாடுகளின் மாநாட்டை நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அதிமுக, திமுக மீது விமர்சனம்.. ஆட்சிக்கு வந்தால் எல்லா சார் மீதும் நடவடிக்கை – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சி - சீமான்: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அதிமுக, திமுக என எல்லா சார் மீதும் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை ஒழிப்பதே எங்கள் எண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.

Seeman : அமித்ஷா தமிழகம் வந்ததற்கு இது காரணமாக இருக்கலாம்.. சீமான் சொன்ன விளக்கம்!

Home Minister Amit Shah's Tamil Nadu Visit | தமிழகத்தில் இன்னும் 10 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Seeman : காமராஜர் 50 படங்கள் நடித்து முதலமைச்சராக வரவில்லை.. விஜயை சாடிய சீமான்!

Seeman React to Vijay Compared to Kamarajar | தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமீபத்தில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர் ஒருவர் விஜயை, இளைய காமராஜர் என்று கூறியிருந்தார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியுள்ளார்.

Seeman : திமுக அவ்வளவு பெரிய எதிரி அல்ல.. மதுரையில் சீமான் பேச்சு!

Seeman Spoke About DMK Power in Tamil Nadu | தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பதில் அளித்துள்ளார்.

பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? ஆபரேஷன் சிந்தூர் பேரணி ஸ்டாலின் நடத்தியது ஏன்? – சீமான் கேள்வி

NITI Aayog meeting Seeman's questions: சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில், முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பினார். பாதுகாப்புப் குறைபாடுகள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும் கடும் விமர்சனம் வைத்தார்.