Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

SIR-ஐ ஆதரிப்பதா? ‘அதிமுக வாக்குகளே காலியாக போகிறது’.. சீமான் பாய்ச்சல்!!

Seeman on SIR; எஸ்ஐஆர் நடைமுறையை இந்த அளவுக்கு அவசர கதியில் அமல்படுத்துவது, மக்களிடையே தேவையில்லாத குழப்பத்தையும், நம்பிக்கையின்மையையும் அதிகரிக்கிறது என பல்வேறு தரப்பிலும் இருந்தும் விமர்சனம் எழுந்துள்ளன. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலை மாற்றுவது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாட்டையே பாதிக்கும் என்றும் கூறுகின்றனர்.

SIR-ஐ ஆதரிப்பதா? ‘அதிமுக வாக்குகளே காலியாக போகிறது’.. சீமான் பாய்ச்சல்!!
எடப்பாடி பழனிசாமி, சீமான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 18 Nov 2025 11:29 AM IST

சென்னை, நவம்பர் 18: அதிமுக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை ஆதரிப்பது, அது அவர்களது முன்னாள் தலைவரால் முன்வைக்கப்பட்ட திட்டம் என்பதாலேயே என்றும், ஆனால் இந்த முடிவால் பழனிசாமியின் வாக்கு நிலையே குறையும் நிலைக்கு இட்டுச் செல்லும் எனவும் சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நவ.4ம் தேதி தொடங்கி எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன. 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசர கதியில் இப்பணிகளை மேற்கொள்வதற்கு பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதில், எஸ்ஐஆர்-க்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதோடு, உச்சநீதிமன்றத்திலும் எஸ்ஐஆர்-க்கு எதிராக தனித்தனியாக ஒவ்வொரு கட்சியும் வழக்கு தொடர்ந்துள்ளன.

எனினும், தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள காரணத்தால் அதிமுக மட்டும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. அதோடு, எஸ்ஐஆர்-க்கு ஆதரவாக அதிமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், அக்கட்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

Also Read: ‘அதீத பணி நெருக்கடி’.. தமிழ்நாட்டில் நாளை முதல் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு!!

எஜமான் கொண்டு வந்த திட்டம்:

அந்தவகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எஸ்ஐஆர் நடைமுறையை கடுமையாக விமர்சித்தார். பழனிசாமி அதை ஆதரிப்பதற்கான காரணம் “இந்த திட்டத்தை அவர்களின் எஜமான் தான் கொண்டு வந்தவர்” என்பதாலேயே என்று அவர் குற்றம்சாட்டினார். ஆனால் இந்த முடிவின் நேரடி பாதிப்பு பழனிசாமியின் சொந்த வாக்குகளிலேயே அதிகமாக ஏற்படும் எனவும் சீமான் கருத்து தெரிவித்தார்.

ஆட்சியாளர்களே வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடந்ததாக கூறப்படும் கள்ள ஓட்டு, பணம் வழங்குதல் போன்ற குற்றச்செயல்களை தேர்தல் ஆணையம் கவனிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், “ஜனநாயக நாட்டில் மக்களின் பெரிய உரிமை வாக்குரிமை. அதை இவ்வளவு எளிதாக நீக்குவது எப்படி நியாயமானது?” என்று கேட்டார். இன்றைய சூழலில் “வாக்காளர்கள் தங்களுக்கான ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, ஆட்சியாளர்களே தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்வு செய்கிறார்கள்; அதுதான் எஸ்ஐஆர்” என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், திமுக போன்ற கட்சிகளுக்கு வலுவான அமைப்பு உள்ளதால் பாதிப்பு குறைவாக இருக்கும்; வளர்ந்து வரும் கட்சிகள் மட்டுமே இந்த நடைமுறையின் சுமையைச் சுமக்க நேரிடும் எனவும் சீமான் கவலை தெரிவித்தார். இதன் விளைவாக குறைந்தது ஒரு கோடி மக்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்றார்.

Also read: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..

ஆதார் அட்டையே ஆதாரம் இல்லையா:

“குடிமக்களுக்கு ஆதார அட்டை தான் அடிப்படை ஆதாரம் என்று நீங்கள் சொன்னீர்கள்; இப்போது அதையே நீங்களே மறுக்கிறீர்கள். இரண்டு மாதங்களில் தேர்தல் வர இருக்கிறது. மக்கள் ஏற்கனவே பதட்டத்தில் இருக்கிறார்கள்; இந்த நேரத்தில் ஏன் இந்த குழப்பம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.