AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த படத்திற்கு முதலில் நோ சொன்னேன்.. ஆனால் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேச்சு!

Aishwarya Lekshmi: மலையாள சினிமாவின் மூலமாக தற்போது தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாக கலக்கிவருபவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர் முன்னதாக பேட்டி ஒன்றில், விஷ்ணு விஷாலின் படத்தில் நடிப்பதற்கு நோ சொன்னது குறித்தும், அதன் காரணம் பற்றியும் தெரிவித்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

அந்த படத்திற்கு முதலில் நோ சொன்னேன்.. ஆனால் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேச்சு!
ஐஸ்வர்யா லெக்ஷ்மிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Mar 2026 08:32 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகியாக இருந்துவருபவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தில் நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) தங்கையாகவும் மற்றும் அசோக் செல்வனின் (Ashok Selvan) மனைவியாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரமானது பெருதும் பேசப்படவில்லை என்றே கூறலாம். இப்படத்தை அடுத்ததாக தொடர்ந்து புது புது படங்களில் ஒப்பந்தமாகிவந்தார். அர்ஜுன் தாஸுடன் (Arjun Das) புது திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார்.

பின் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) கட்டா கிஸ்தி 2 (Gatta Kusthi 2) படத்திலும் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே தொடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கட்டா குஸ்தி 1 (Gatta Kusthi 1) படத்தில் முதலில் நடிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சலார் 2 படம் எப்படி இருக்கும்? தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் அப்டேட்

விஷ்ணு விஷாலுடன் அதில் நடிக்க மறுத்தேன் என ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேச்சு:

முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அதில் “என்னிடம் முதலில் கட்டா குஸ்தி படத்தின் கதையை சொல்லும்போது நான் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. நான் இதில் நடிக்கவில்லை என கூறிவிட்டேன். எனென்றால் முதலில் என்னிடம் சொல்லப்பட்ட கதையில் டபுள் ஆக்ஷன் இருந்தது. அதனால் நான் நடிக்க ஒத்துக்கல. பிறகு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் சரி நடிக்கிறேன்” என அதில் நடித்தேன் என்று அதில் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இந்த போட்டோவில் மகேஷ் பாபு கையில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவரின் முதல் தமிழ் படமே ஹிட்!

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி போட்டோஷூட் பதிவு:

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில், தற்போது தமிழில் கட்டா குஸ்தி 2 படத்தில் கதாநாயகியாக நடித்தவருகிறார். இப்படமானது கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள நிலையில், இதிலும் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இதை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தவருகிறது. இப்படமானது 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடப்படக்குழு திட்டமிட்டுவருகிறது. மேலும் இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. இவருக்கு தற்போது படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us