AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த போட்டோவில் மகேஷ் பாபு கையில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவரின் முதல் தமிழ் படமே ஹிட்!

Tamil Actress Childhood Photo : தென்னிந்திய சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த வகையில் கீழே இருக்கும் போட்டோவில் நடிகர் மகேஷ் பாபுவின் கையில் இருக்கும் நடிகை யாருனு தெரியுமா?. விவரங்கள் இதோ.

இந்த போட்டோவில் மகேஷ் பாபு கையில் இருக்கும் சிறுமி யாருனு தெரியுமா? இவரின் முதல் தமிழ் படமே ஹிட்!
குழந்தைப் பருவ புகைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Mar 2026 08:27 AM IST

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் திரைப்படங்களில் லீட் கதாநாயகிகளாக நடித்துவருகின்றனர். அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களின் ரசிகர்கள் மத்தியில் பகிரப்படுவது வழக்கமே. இந்நிலையில் மேலே இருக்கும் புகைப்படத்தில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் (Mahesh Babu) கையில் இருக்கும் சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?. இந்த சிறுமி ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தெலுங்கு சின்னத்திரை சீரியலிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து சின்னத்திரையில் நடித்துவந்த இவர், கடந்த 2010ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை அடுத்ததாக தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆர்வம் இவருக்கு இருந்தது. அந்த வகையில் இவர் தமிழில் கடந்த 2013ம் ஆண்டில் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்து, கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் தமிழில் முதலில் நடித்த படமே இவருக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தது. இதையடுத்து நடிகர்கள் விஷ்ணு விஷால் (Vishnu Vishal), ஜீவா (Jiiva), கார்த்தி (Karthi), விஷால் என பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் நடித்துள்ளார். இன்னுமா இந்த சிறுமி யார் என தெரியல? அட இது நம்ம லதா பாண்டி நடிகை ஸ்ரீதிவ்யாதான் (Sri Divya).

இதையும் படிங்க: கைதி 2 படம் குறித்து 14-ம் தேதி வெளியாகும் சூப்பர் அப்டேட்… வைரலாகும் தகவல்

நடிகை ஸ்ரீதிவ்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sri Divya (@sd_sridivya)

கடந்த 1993ம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் இவர் பிறந்தார். இவர் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நிலையில், குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபுவுடன் தனது சிறுவயதிலே நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பின் மீண்டும் சினிமாவிற்கு வரும் ஆசைப்பட்ட இவர், மனசாரா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆரம்பத்தில் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவர், பின் தமிழில் 2013ம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: ‘என்னை மிகவும் உணர்ச்சிப்பட வைத்தது’ – விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எமோஷனல் பதிவு!

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “லதா பாண்டி” என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இதன் பிரபலத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் அடுத்தடுத்த படங்கள் குவிந்தது. மேலும் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், கடந்த 2024ம் ஆண்டில் வெளியான மெய்யழகன் என்ற படத்தில் கார்த்தியின் மனைவியாகவும் இவர் நடித்திருந்தார். பெருமளவு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்காத நிலையில், தற்போது இந்தத் படங்களிலும் இவர் கதாநாயகியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us