AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Deverakonda: ‘என்னை மிகவும் உணர்ச்சிப்பட வைத்தது’ – விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எமோஷனல் பதிவு!

Ranabaali Movie: விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரணபாலி என்ற படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தற்போது அது குறித்து எமோஷனல் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

Vijay Deverakonda: ‘என்னை மிகவும் உணர்ச்சிப்பட வைத்தது’ – விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எமோஷனல் பதிவு!
ரணபாலி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 01 Mar 2026 17:18 PM IST

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் (Vijay Deverakonda) நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் கிங்டம் (Kingdom). இப்படமானது கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்தாக இவர் விடி15 மற்றும் விடி16 போன்ற திரைப்படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார். அதில் இவர் இயக்குநர் ராகுல் சாங்க்ரித்யன் (Rahul Sankrityan) இயக்கத்தில் நடித்துவரும் படம்தான் “ரணபாலி ” (Ranabaali). இந்த படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணி கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது 60ஸ்-ல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் முதல் பாடல் “யெந்தையா சாமி” சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

பாடல் ரிலீஸின்போது, இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியிருந்த நிலையில், அதில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா 60ஸ் காலகட்டத்தில் உள்ள ஜோடியைப்போல அமர்ந்திருக்கும்படி இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. தற்போது அது குறித்து எமோஷனல் பதிவு ஒன்றை விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: STR 51 படத்தில் சிம்பு உடன் இணைந்து நடிகர் சந்தானம் – வைரலாகும் தகவல்

ரணபாலி திரைப்படம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்ட எமோஷனல் பதிவு:

இந்த பதிவில் விஜய் தேவரகொண்டா, “இயக்குநர் ராகுல் சாங்க்ரித்யன் வெளியிட்ட பதிவு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது. உண்மையான விவரங்கள் மற்றும் மக்கள் மீதான அவரின் அபரிமிதமான கவனம் என்னை மிகவும் உற்சாகப்பட மற்றும் ஊக்கப்படுத்தியது.

இதையும் படிங்க: கைதி 2 படம் குறித்து 14-ம் தேதி வெளியாகும் சூப்பர் அப்டேட்… வைரலாகும் தகவல்

ரணபலி படம் குறித்து அவர் வெளியிட்ட பதிவு படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது எங்கள் நிலத்திலிருந்து வந்த கதை, சிறந்த படமாக உருவாக்கும் இந்த பயணத்தில், நானும் ராஷ்மிகாவும் உங்களுடன் இருக்கிறோம்” என அந்த பதிவில் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளர்.

ரணபாலி படத்தில் ரிலீஸ் எப்போது :

சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் ரிலீஸ் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இதில் விஜய் தேவரகொண்டா முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது 60ஸ் காலகட்ட திரைப்படம் என்ற நிலையில், மக்கள் மத்தியில் இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2026 செப்டம்பர் 11ம் தேதியில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us