விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா கல்யாண ஸ்பெஷல்… ரணபாலி படத்திலிருந்து வெளியானது பாடல்!
Yedhayya Saami Special Surprise -Ranabaali | தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்று வந்த ரீல் ஜோடிகளான நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் தற்போது ரியல் ஜோடிகளாக மாறியுள்ளதை அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவை திருமணம் செய்துக்கொண்டார். ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் இவர் தெலுங்கு சினிமா மூலமாக மக்களிடையே அதிக அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு இந்தி என பான் இந்திய நாயகியாக மாறினார். மேலும் இந்திய ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் திரையில் தோன்றினார். திரையில் இவர்களின் ஜோடியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
அந்தப் படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட் படத்தில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில் ஒன்றாக தோன்ற உள்ளனர். அதன்படி இவர்கள் இருவரும் தற்போது ரணபாலி என்ற படத்தில் நாயகன் நாயகியாக நடித்து வருகின்றனர். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.




ரணபாலி படத்திலிருந்து வெளியானது பாடல்:
இந்த நிலையில் ரீல் ஜோடிகளாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் கடந்த 26-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இதனைக் கொண்டாடும் விதமாக ரணபலி படக்குழு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடலை வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் இந்த ரணபாலி படத்தை இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் எழுதி இயக்கி உள்ள நிலையில் இசையமைப்பாளர் அஜய்-அதுல் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரணபாலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Our RANABAALI and JAYAMMA ✨
Together, forever ❤️Celebrating their love with this special surprise 🫶
▶️ https://t.co/ZZTcMpUNOA#EndhayyaSaami – Telugu#YedhayyaSaami – Tamil#EntheKannaala – Malayalam#EnayyaSaami – Kannada#OMereSaajan – Hindi#Ranabaali Grand release… pic.twitter.com/QtSr0ydBKV— Mythri Movie Makers (@MythriOfficial) February 28, 2026
Also Read… டான் படத்தின் கதையை கேட்கும்போதே சொன்னேன்… சமுத்திரக்கனியின் சுவாரஸ்ய பேச்சு