விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுதான்… வெளியானது டைட்டில் க்ளிம்ஸ் வீடியோ
Actor Vijay Devarakonda 14th Movie Update: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது நடிப்பில் 14-வதுதாக உருவாகி வரும் படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. கடந்த 2011-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா தொடர்ந்து 15 ஆண்டுகளாக பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகனாக மாறினார் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்படி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கிங்டம். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்ட அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அதன்படி தற்போது ரௌடி ஜனார்த்தனா மற்றும் விடி 14 ஆகியப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.




விஜய் தேவரகொண்டாவின் 14-வது படத்தின் டைட்டில் இதுதான்:
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள 14-வது படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு ரணபாலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் தோன்ற உள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 11-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணபாலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The man who became a LEGEND for his people.
The legend who became a NIGHTMARE for the evil.His name is #RANABAALI 🔥
Watch the glimpse here▶️https://t.co/tK8k7e1vPr
Grand release worldwide on September 11th 💥#VD14@TheDeverakonda @iamRashmika @Rahul_Sankrityn… pic.twitter.com/AwHziuEr7I
— Mythri Movie Makers (@MythriOfficial) January 26, 2026
Also Read… மம்முட்டி – மோகன்லாலின் பேட்ரியாட் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி