மம்முட்டி – மோகன்லாலின் பேட்ரியாட் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி
Patriot Movie Poster: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் பேட்ரியாட். இந்தப் படத்தின் போஸ்டர்களை ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபலங்களும் தற்போது வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் போஸ்டரை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இவர்கள் இருவரும் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து பல முறை படங்களில் நடித்து இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இந்த கூட்டணியைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் கூட்டணி தற்போது இணைந்து நடிக்கும் படம் பேட்ரியாட். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக திரையரங்குகளில் வெளியான படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைப் போல இந்தப் படமும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் படத்தில் நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் முன்னணி வேடத்தில் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து நேற்று 25-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு படத்தில் நடித்த நடிகர்களின் கதாப்பாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.




பேட்ரியாட் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி:
இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் போஸ்டர்களை பான் இந்திய மொழிகளில் உள்ள பிரபலங்கள் அவரவர் மொழிகளில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மொழியில் உருவாகி உள்ள போஸ்டரை இயக்குநர் அட்லி வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… அல்லூ அர்ஜூன் படம் எப்படி இருக்கும்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
இயக்குநர் அட்லி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
“Unleashing the spirit of fearless voices, this Republic Day”#PATRIOT arrives worldwide on April 23.
The countdown begins NOW@mammukka @Mohanlal @kunchacks #FahadhFaasil #Nayanthara #AntoJoseph #MaheshNarayanan #AntoJosephFilmCompany #Mammootty #Mohanlal #Patriot pic.twitter.com/4jGp6Pr8Rm
— atlee (@Atlee_dir) January 26, 2026
Also Read… பேட்ரியாட் படத்திலிருந்து வெளியானது நயன்தாராவின் போஸ்டர்!