Jana Nayagan: தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட இறுதித் தீர்ப்பு எப்போது இருக்கும்?
Jana Nayagan Censor Case Final Judgment: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் கடைசி படமாக வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இப்படம் சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில், இப்படத்தின் உயர் நீதிமன்ற இறுதித் தீர்ப்பு எப்போது இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன் (Jna Nayagan). இப்படத்தில் தளபதி விஜய் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். மேலும் மிக முக்கிய வேடத்தில் மமிதா பைஜூ (Mamitha Baiju), பாபி தியோல் (Bobby Deol), நரேன், பிரியாமணி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள நிலையில், கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனமானது இதை தயாரித்துள்ளது. இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் (Chennai High Court) வழக்கு நடைபெற்றுவந்தது. கிட்டத்தட்ட 4 விசாரணைகள் முடிந்த நிலையில், இப்படத்திற்கு விசாரணை முடித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 ஜனவரி 20ம் தேதியில் நடந்த விசாரணையில் இப்படத்தின் சென்சார் வழக்கு தொடர்பான படக்குழு மற்றும் தணிக்கைத்துறையின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தீர்ப்பு எப்போது இருக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: பிரபல மலையாள இயக்குநரை புகழ்ந்து பேசிய இயக்குநர் சுதா கொங்கரா – வைரலாகும் வீடியோ!
ஜன நாயகன் பட சென்சார் வழக்கு தீர்ப்பு எப்போது இருக்கும் :
இந்த ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் பிரச்சனைக்கான இறுதித் தீர்ப்பிற்கு மக்கள் காத்திருக்கின்றனர். அந்த விக்கியில் இதன் இறுதித் தீர்ப்பு வரும் 2026 ஜனவரி 27ம் தேதியில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை மீண்டும் திருத்தி சென்சார் வழங்க திருத்த குழுவிற்கு அனுபவத்திற்கும் அதிக வாய்புக்களை உள்ளதாம்.
இதையும் படிங்க: சியான் 63 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
உயர் நீதிமன்றம் சான்றிதழ் வழங்குவதற்கான சரியான காலக்கெடுவை வழங்காவிட்டால், படத்தைப் பார்த்து சான்றிதழ் வழங்க மறுஆய்வுக் குழுவை ஏற்பாடு செய்ய இன்னும் இரண்டு முதல் வாரங்கள் ஆகலாம். அதற்கு முன்னே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டால் இப்படத்தின் ரிலீஸ் நிச்சயமாக தேர்தலுக்கு பின்னே வெளியாகும். அப்படி தேதிகள் அறிவிக்கப்பட்ட தாமதமானால் இப்படத்தை பிப்ரவரி 19ம் தேதி அல்லது பிப்ரவரி 26ம் தேதியில் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
ஜன நாயகன் சென்சார் தீர்ப்பு குறித்த பதிவு :
#JanaNayagan – The wait continues for the final judgment.. ✌️
It may be pronounced on January 27.
There are high chances that the film will be sent to the Revising Committee..🚶Organising the Revising Committee to watch the film and issue the certificate could take another two… pic.twitter.com/adXW4InqIn
— Laxmi Kanth (@iammoviebuff007) January 22, 2026
இந்த சென்சார் சான்றிதழ் பிரச்சனையானது கிட்டத்தட்ட 3 வாரங்களாக நடந்துவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகவேண்டிய இப்படம் இன்னும் வெளியாகாமல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையே ஏற்படுத்திவருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் வெளியாகும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.