Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலகம் முழுவதும் சிறை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்

Vikram Prabhus Sirai Movie Box Office Collection: தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சிறை. இந்தப் படம் உலக அளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமா அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சிறை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியானது தகவல்
சிறைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Jan 2026 21:48 PM IST

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன பட்ஜெட்டில் கதையை மட்டுமே நம்பி வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனை நன்றாகவே தற்போது மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு எல்லாம் உச்ச நடிகர்களின் படங்கள் மட்டுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சூழலில் தற்போது தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் கதையை மட்டுமே நம்பி பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்கவில்லை என்றாலும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சிறை. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். இது இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இயக்குநர் தமிழ் திரைக்கதையை எழுதியுள்ளார். இவர் தமிழ் சினிமாவில் பலப் படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆன டாணாக்காரன் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் திரைக்கதை எழுதிய இந்த சிறை படமுக் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சிறை படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களைக் கடந்த நிலையில் படம் உலக அளவில் இதுவரை ரூபாய் 31.58 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… பராசக்தி படத்தில் ராணாவின் ரோலை அந்த நடிகர் பண்ணவேண்டியது.. சுதா கொங்கரா ஓபன் டாக்!

சிறை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Prem Kumar: அதைக்கேட்டு திரிஷா ரொம்பவே அழுதுட்டாங்க – இயக்குநர் பிரேம் குமார் சொன்ன விஷயம்!