சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பராசக்தி படம் தற்போது 100 கோடிகள் வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடிகள் வசூலித்த படங்களின் பட்டியளை தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி பின்பு நாயகனாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் பெரும்பாலும் காமெடி கதையை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ரோம் காம் படங்களில் நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பிறகு கதைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி மிகவும் அழுத்தமான கதைகளில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் 100 கோடியை தாண்டி வருகின்றது. அதன்படி தற்போது வெளியான பராசக்தி படமும் ரூபாய் 100 கோடியை வசூலித்தது என்று தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியனது பராசக்தி. இந்தப் படத்தினை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியாகி 10 நாட்களைக் கடந்துள்ள நிலையில் படம் இதுவரை 100 கோடிகள் வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடிகள் வசூலித்த படம் குறித்து தற்போது பார்க்கலாம்.




சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த படங்களின் லிஸ்ட்:
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் அதில் 5 படங்கள் தற்போதுவரை 100 கோடிகள் வசூலித்துள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான், அமரன், மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் இதுவரை 100 கோடிகள் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகும் படங்கள் 100 கோடிகள் வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவடையும்? வைரலாகும் தகவல்
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A roar heard across the world 💥#Parasakthi storms past the ₹100 CRORE mark worldwide 🌍
Now running successfully in theatres near you#ParasakthiPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_… pic.twitter.com/HuJuUTOO3E
— DawnPictures (@DawnPicturesOff) January 20, 2026