போர் தொழில் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தப் படத்திற்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டது – கர பட இயக்குநர் சொன்ன விசயம்
Director Vignesh Raja: தமிழ் சினிமாவில் போர் தொழில் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இவர் அறிமுகம் ஆன முதல் படமே மாபெரும் வெற்றியப் பெற்றதால் அடுத்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்தது.
தமிழ் சினிமாவில் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் போர் தொழில். சீரியல் கில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே விக்னேஷ் ராஜாவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்.சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத் பாபு, ஹரிஷ் குமார், பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், சந்தோஷ் கீழத்தூர், சுனில் சுகதா, லிஷா சின்னு, முல்லை அரசி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் விக்னேஷ் ராஜா சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




போர் தொழிலுக்கு பிறகு அடுத்தப் படத்தில் ஒரு அழுத்தம் ஏற்பட்டது:
தனுஷ் சார் போன்ற திறமையான ஒரு நடிகருடன், க்ரே ஷேட் குணங்களைக் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை ஆராய்வது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. பார்வையாளர்கள் அவர் மீது தொடர்ந்து அனுதாபம் கொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக, ஒரு சமநிலையைக் கடைப்பிடிப்பது குறித்து நாங்கள் பல விவாதங்களை நடத்தினோம்.
‘போர் தொழில்’ படத்திற்குப் பிறகு, அடுத்த உடனடித் திட்டம் மிகவும் சவாலானதாகிவிடுகிறது. எப்போதும் ஒரு அழுத்தம் இருக்கும். நீங்கள் முந்தைய படத்தை விடச் சிறந்த ஒன்றை உருவாக்கலாம், அல்லது உருவாக்காமலும் போகலாம். இது என்னை மிகவும் பாதிக்கிறது மற்றும் எனது திரைக்கதை எழுதும் விதத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
‘போர் தொழில்’ படத்திற்கு முன்பு நான் ஒரு வேறுபட்ட விக்னேஷ் ராஜாவாக இருந்தேன், இப்போது நான் ஒரு வேறுபட்டவனாக இருக்கிறேன். ஆனால், ‘போர் தொழில்’ ஏன் வெற்றி பெற்றது என்பதை நான் எனக்குள் தொடர்ந்து நினைவூட்டிக்கொள்கிறேன். அது நேர்மையும் சமநிலையும் தான். அந்தச் செயல்முறையை மீண்டும் நம்ப விரும்புகிறேன். தேவையற்ற சத்தங்களை ஒதுக்கிவிட்டு, தெளிவுடன் என் வேலையில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். அப்படித்தான் நாங்கள் இந்தப் படத்தை முன்னெடுத்துச் சென்றோம்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director #VigneshRaja About #Kara 🔥:
• Exploring a character with grey shades with an actor of #Dhanush sir’s calibre was a great experience..🤝 We had many discussions about striking a balance to make sure the audience still roots for him..👌🔥
• After Porthozil, the… pic.twitter.com/0tzFFmfmlR
— Laxmi Kanth (@iammoviebuff007) January 20, 2026
Also Read… Kayadu Lohar: இம்மார்ட்டல் படத்தில் கயாடு லோஹர் இணைந்தது இப்படிதான் – இயக்குநர் மாரியப்பன் சின்னா!