தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
Sothern Parts Of Tamil Nadu Will Have Lite Rain Today | தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, மார்ச் 11 : தமிழகத்தில் இன்று (மார்ச் 11, 2026) முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்றைய வானிலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழக மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல மார்ச் 12, 2026 ஆம் தேதி முதல் மார்ச் 15, 2026 ஆம் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானில் நிலவு கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 16 ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும்
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மார்ச் 16, 2026 அன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.