கண்டிஷன் ஃபாலோ பண்ணுங்கடா டயலாக் வைத்தது ஏன்… நடிகர் ஜீவா விளக்கம்
Jiiva about Conditions ah Follow pannungada dialogue: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் தம்பி தலைவர் தலைமையில். இந்தப் படத்தில் வந்த கண்டிஷன் ஃபாலோ பண்ணுங்கடா டயலாக் குறித்து ஜீவா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். தொடர்ந்து காமெடியை மையமாக வைத்து வெளியாகும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஜீவா. அதன்படி சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து பல புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படமும், நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார் படமும் ஜீவா நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் படமும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த பொங்கல் ரேஸில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் நடிகர் ஜீவானின் தலைவர் தம்பி தலைமையில் படம் தான் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வரும் நிலையில் படத்தில் வந்த முக்கியமான டயலாக் குறித்து நடிகர் ஜீவா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
கண்டிஷன் ஃபாலோ பண்ணுங்கடா டயலாக் வைத்தது ஏன்:
அதன்படி நடிகர் ஜீவா அந்த பேட்டியில் பேசியதாவது, நாங்கள் வெறும் டிரெண்டைப் பின்தொடர்ந்தோம். அந்த வசனத்தை அந்த காட்சியில் வைக்குமாறு இயக்குநர் பரிந்துரைத்தார், நானும் அதை அறியாமல் பேசிவிட்டேன். அதற்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று அதில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் ஜீவாவின் பேச்சு:
#Jiiva about “Conditions ah Follow pannungada” dialogue in #TTT :
“We were just following the trend.. Director suggested placing the dialogue in that scene, and I delivered it innocently.. It received a big response and was not intended to hurt anyone..”pic.twitter.com/lA1zNv0sNx
— Laxmi Kanth (@iammoviebuff007) January 18, 2026
Also Read… ஜிவி பிரகாஷ் உடன் பணியாற்ற பல நாட்களாக காத்திருந்தேன் – நடிகர் சூரி



