Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பஞ்சாயத்து தலைவராக ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Thalaivar Thambi Thalaimaiyil Movie X Review: நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தினை பார்த்த ரசிகர்கள் என்ன தெரிவித்துள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

பஞ்சாயத்து தலைவராக ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
தலைவர் தம்பி தலைமையில் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jan 2026 15:05 PM IST

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ஜீவா நடிப்பில் இன்று 15-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் தலைவர் தம்பி தலைமையில். பொலிட்டிகள் சட்டையர் படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் நித்திஷ் சகாதேவ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ஜீவா உடன் இணைந்து நடிகர்கள் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜென்சன் திவாகர், ஜெய்வந்த், சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனுராஜ் ஓபி, சரத், சாவித்திரி என பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியான போதே ரசிகர்களிடையே இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அது என்ன என்று தற்போது பார்க்கலாம்.

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் விமர்சனம்:

தலைவர் தம்பி தலைமையில் படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான, வேடிக்கையான பொழுதுபோக்குத் திரைப்படம். இறுதியில் சிந்திக்க வைக்கும் ஒரு செய்தியையும் கொண்டுள்ளது. ‘ஃபாலிமி’ படத்திற்குப் பிறகு, நிதீஷ் சஹாதேவ் மீண்டும் ஒருமுறை சிரிப்பு விருந்துடன் திரும்பி வந்துள்ளார். அதே சமயம், அகங்கார மோதல்களும் வதந்திகளைப் பரப்புபவர்களும் ஒரு கிராமத்தையே எப்படி அழிக்கக்கூடும் என்ற உணர்வுப்பூர்வமான செய்தியையும் இப்படம் முன்வைக்கிறது.

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் விமர்சனம்:

ஜீவா ஏன் ஒரு இயல்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். இது ஒரு முழுமையான, வேடிக்கை நிறைந்த குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம். இளவரசு மற்றும் தம்பி ராமையா ஆகியோர் பிடிவாதக்கார அண்டை வீட்டுக்காரர்களாகத் தங்கள் கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தி, படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றனர். இந்த பொங்கலுக்கு கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் விமர்சனம்:

ஜீவாவின் துடிப்பான திரைப் பிரசன்னம், அவரது நடிப்பை வேடிக்கையானதாகவும் ரசிக்கத்தக்கதாகவும் ஆக்குகிறது. கிராமப்புறப் பின்னணியும் மையக் கதைக் கருவும் நம்பகத்தன்மையுடன் உள்ளன, நகைச்சுவைக் காட்சிகள் சிறப்பாக எடுபட்டன.

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் விமர்சனம்:

ஒரு முழுமையான சிரிப்பு கலவரம்! கதை ஒரு இரவில் நடக்கிறது. இரண்டு அண்டை வீட்டாருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையிலான மோதல்.. நிறைய நகைச்சுவையான சூழ்நிலைகள். ஜீவா தான் அதைத் தீர்க்கிறார், பஞ்சாயத்துத் தலைவர். அவர் சரியான நீதியைச் செய்துள்ளார்.

Also Read… மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு! 

தலைவர் தம்பி தலைமையில் படத்தின் விமர்சனம்:

தலைவர் தம்பி தலைமையில் படம் டிசண்ட்டான கிராமப்புற நகைச்சுவை பொழுதுபோக்கு படமாகும். நடிகர்கள் ஜீவா, இளவரசு, தம்பிராமையா 3 பேரின் நடிப்பும் மிகச் சிறப்பு. படத்தின் நேரம், நடிகர்கள், தேவையற்ற காட்சிகள் இல்லாத திரைக்கதை இதெல்லாம் படத்திற்கு பாஸிடிவாக உள்ளது.

Also Read… சுவாரஸ்யமும் த்ரில்லரும் நிறைந்த இந்த மாஸ்க் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?