Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு!

Drishyam 3 Movie Release Update: மலையாள சினிமாவில் க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாகம் எப்போது வெளியாகிறது என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு!
த்ரிஷ்யம் 3Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jan 2026 21:13 PM IST

மலையாள சினிமாவில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் த்ரிஷ்யம். இந்தப் படம் மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்தது மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தை பான் இந்திய மொழிகளில் ரீ மேக் செய்த போது அதையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதன்படி மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நடிகர் மோகன்லாலின் வாழ்க்கையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. தனது மூத்த மகளை தவறாக படம் பிடித்து ப்ளாக்மெயில் செய்த ஒரு காவல்துறை அதிகாரியின் மகனை மோகன்லாலின் மகள் எதிர்பாராதவிதமாக கொலை செய்துவிடுகிறார். அந்த கொலை வழக்கில் இருந்து மோகன்லால் தனது குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் முன்னதாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது பாகத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

அதன்படி இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகி உள்ள இந்த த்ரிஷ்யம் 3 படத்தில் நடிகர்கள் ராணி ஜார்ஜாக மீனா,
அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், கலாபவன் ஷாஜோன், நீரஜ் மாதவ், இர்ஷாத், ரோஷன் பஷீர், அனீஷ் ஜி.மேனன், குஞ்சன், கோழிக்கோடு நாராயணன் நாயர், பைஜு வி.கே., பி. ஸ்ரீகுமார், ஷோபா மோகன், கூட்டிக்கல் ஜெயச்சந்திரன், கலாபவன் ரஹ்மான், கலாபவன் ஹனீப், பாலாஜி சர்மா, பிரதீப் சந்திரன், ஆண்டனி பெரும்பாவூர், மேல ரகு, அருண் எஸ். பனக்கல், நிஷா சாரங், ஜீத்து ஜோசப் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Also Read… கார்த்தி – நலன் குமாரசாமி காம்போ வெற்றிப் பெற்றதா? வா வாத்தியார் படத்தின் விமர்சனம் இதோ!

த்ரிஷ்யம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பண்டிகையை கொண்டாடுங்க… நாளை வெளியாகிறது தனுஷ் 54 படத்தின் முக்கிய அப்டேட்