AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SA vs NZ Semifinal: தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அரையிறுதிக்கு மழை அச்சுறுத்தலா? முக்கிய முடிவை எடுத்துள்ள ஐசிசி!

T20 World Cup 2026 Semi Final Washout Rules: 2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐ.சி.சி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மழை பெய்தாலும் போட்டியை முடிக்க அனுமதிக்கும் வகையில் போட்டி நாளில் கூடுதலாக 90 நிமிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

SA vs NZ Semifinal: தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அரையிறுதிக்கு மழை அச்சுறுத்தலா? முக்கிய முடிவை எடுத்துள்ள ஐசிசி!
தென்னாப்பிரிக்கா Vs நியூசிலாந்துImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Mar 2026 14:40 PM IST

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) முதல் அரையிறுதியானது இன்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து (SA vs NZ) அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த இரு அணிகளும் 2026 டி20 உலகக் கோப்பையில் மோதுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, நடந்த இரு அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இருப்பினும், இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, மழையால் போட்டி தடைபட்டால் என்ன நடக்கும் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: T20 அரையிறுதியில் மழை வந்தால் என்னாகும்? ரிசர்வ் நாள், கூடுதல் நேரம் விதிகள் இவைதான்!

2026 டி20 உலகக் கோப்பையில் மழையால் போட்டி தடைப்படுமா?

2026 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐ.சி.சி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மழை பெய்தாலும் போட்டியை முடிக்க அனுமதிக்கும் வகையில் போட்டி நாளில் கூடுதலாக 90 நிமிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, போட்டி நாளான இன்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி மழை காரணமாக போட்டியை முடிக்க முடியாவிட்டால், 2026 மார்ச் 5ம் தேதிக்கு ஒரு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. அன்று போட்டி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கும்.

ஆனால் ஏதேனும் காரணத்தால் ரிசர்வ் நாளில் ஒரு பந்து கூட வீச முடியாவிட்டால், விதிகளின்படி, சூப்பர்-8ல் ஆதிக்கம் செலுத்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும்.

யாருக்கு சாதகம்?

2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா 6 புள்ளிகளுடன் தங்கள் குழுவில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில், நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. எனவே, போட்டி முழுமையாக மழையால் ரத்து செய்யப்பட்டால், தென்னாப்பிரிக்கா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் களமிறங்கும்.எனவே, இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.

ALSO READ: அரையிறுதியில் ஒரே அணி, ஒரே ஸ்டேடியம்.. 39 ஆண்டுகால பழியை தீர்க்குமா இந்தியா?

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்து அணிகளும் 19 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், தென்னாப்பிரிக்கா அணி அதிகபட்சமாக 12 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இந்த அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணியே வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow Us