கார்த்தி – நலன் குமாரசாமி காம்போ வெற்றிப் பெற்றதா? வா வாத்தியார் படத்தின் விமர்சனம் இதோ!
Vaa Vaathiyaar Movie X Review: நடிகர் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் வா வாத்தியார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்த மக்கள் என்ன விமர்சனம் அளித்துள்ளார்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் வா வாத்தியார். இந்தப் படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி எழுதி இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான சூது கவ்வும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்க்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான காதலும் கடந்துபோகும் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் ஆக்ஷன் காமெடி பாணியில் உருவான் இந்த வா வாத்தியார் படம் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தது.
ஆனால் தயாரிப்பாளரின் கடன் பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அனைத்துப் பிரச்சனைகளும் முடிவடைந்து இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படத்தைப் பார்த்த ரசிகர்கள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.




வா வாத்தியார் படத்தின் விமர்சனம்:
#VaaVaathiyaar – First Half Review Average
– The story hasn’t really picked up yet.
– #Karthi’s performance is very good.
– There are elements related to #MGR in the film.
– The Karthi–MGR combination feels magical and works well.
– The heroine, #KrithiShetty, appears only in a… pic.twitter.com/MA8mO39HA1— Movie Tamil (@_MovieTamil) January 14, 2026
கதை இன்னும் முழுமையாக சூடுபிடிக்கவில்லை. கார்த்தியின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. படத்தில் எம்.ஜி.ஆர் தொடர்பான அம்சங்கள் உள்ளன. கார்த்தி மற்றும் எம்.ஜி.ஆர் கூட்டணியானது ஒருவித மாயாஜால உணர்வைத் தந்து, நன்றாகப் பொருந்துகிறது. கதாநாயகி கீர்த்தி ஷெட்டி சில காட்சிகளில் மட்டுமே தோன்றிவிட்டு மறைந்துவிடுகிறார். பாடல்கள் சுமாராக உள்ளன. ஒட்டுமொத்தமாக, முதல் பாதி இன்னும் கதையின் மையக்கருத்துக்குள் செல்லவில்லை. இடைவேளைக் காட்சி அவ்வளவு வலுவாகவோ அல்லது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவோ இல்லை.
வா வாத்தியார் படத்தின் விமர்சனம்:
#VaaVaathiyaar – It’s a One Man Show from #Karthi ..🔥🤝 He literally carried the film on his shoulders..⭐ His Vaathiyaar Transformations and Mannerisms in the Second Half was..👌 Superb Performance..🤝 pic.twitter.com/cN1kQ9qqu9
— Laxmi Kanth (@iammoviebuff007) January 14, 2026
இது கார்த்தியின் தனி ஒருவன் ஆட்டம். அவர் உண்மையில் படத்தைத் தன் தோள்களில் சுமந்தார். இரண்டாம் பாதியில் அவரது வாத்தியார் தோற்ற மாற்றங்களும் பாவனைகளும் அருமையாக இருந்தன. அற்புதமான நடிப்பு.
வா வாத்தியார் படத்தின் விமர்சனம்:
#VaaVaathiyaar interval – Yov Nalan ??? Ennaya panni vachuchu irukeenga !
Absolute goosebumps in the interval and I do not want to reveal it !
Pongal darkest horse this !!
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 14, 2026
வா வாத்தியார் படத்தின் இண்ட்ரவல். யோவ் நலன்… என்னயா பண்ணி வச்சு இருக்கீங்க. இடைவேளையின்போது மெய்சிலிர்த்துப் போனேன், அதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை! பொங்கலின் சர்ப்ரைஸ் திரைப்படம் இது.
Also Read… Vaa Vaathiyaar: வா வாத்தியார் பட ரிலீஸை முன்னிட்டு ‘எம்.ஜி.ஆர்’ நினைவிடத்திற்கு சென்ற படக்குழு!
வா வாத்தியார் படத்தின் விமர்சனம்:
#VaaVaathiyar— A middling first half!
It has an interesting plot and fresh making but the problem is with the screenplay that goes for a toss every now and then.MGR connect and Fantasy elements are good but again its the screenplay that doesn’t make us to engage well.Finishes… pic.twitter.com/by7V5Y6bsq
— What The Fuss (@WhatTheFuss_) January 14, 2026
இது ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தையும் புத்தம் புதிய உருவாக்கத்தையும் கொண்டுள்ளது, ஆனால் அவ்வப்போது தடுமாறும் திரைக்கதையே இதில் உள்ள சிக்கல். எம்.ஜி.ஆர் தொடர்பு மற்றும் கற்பனை கூறுகள் நன்றாக இருந்தாலும், மீண்டும் அந்தத் திரைக்கதையே நம்மை முழுமையாக ஒன்றிப்போக விடவில்லை.
Also Read… அல்லு அர்ஜுன் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சம்பளம் இத்தனை கோடிகளா? வைரலாகும் தகவல்