Karthi: எனக்கு தடங்கல் ஒன்னும் புதிதல்ல.. சூர்யா அண்ணாவிற்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்- கார்த்தி பேச்சு!
Karthi About Suriyas Support For Release Of Vaa Vaathiyaar: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் கார்த்தி. இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் வா வாத்தியார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி, அவரின் அண்ணனும், நடிகருமான சூர்யாவிற்கு நன்றிக்கடன்பட்டுளேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இந்த படத்தில் கார்த்தி அதிரடி போலீஸ் வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கிரித்தி ஷெட்டி (Krithi Shetty) நடித்துள்ளர். இந்த படத்தை பிரபல இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan kumarasamy) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், ஞானவேல் ராஜா (Ganavel Raja) தயாரித்துள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷன் , காமெடி கதையில் தயாராகியுள்ளது. இந்த படம் ஆரம்பத்தில் 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், தயாரிப்பாளரின் கடன் பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் ரிலீஸை சென்னை உயர்நீதிமன்றம் தடை செய்திருந்தது. தற்போது இந்த பிரச்சனைகள் முடிவடைந்த நிலையில், 2026 ஜனவரி 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இன்று 2026 ஜனவரி 13ம் தேதியில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் பேசிய கார்த்தி, வா வாத்தியார் பட ரிலீஸ் சிக்கல் குறித்தும், தனது அண்ணன் சூர்யாவின் (Suriya) உதவி குறித்தும் மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: பொங்கலுக்கு பிறகே உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகன் பட விசாரணை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
வா வாத்தியார் பட செய்தியாளர் சந்திப்பில் சூர்யா குறித்து பேசிய கார்த்தி :
அந்த நேர்காணலில் பேசிய கார்த்தி, “கடந்த வருடம் பெரிய ப்ரோமோஷன்களுடன் படத்தை வெளியிட முயற்சி செய்திருந்தோம். அது தடங்களாகிவிட்டது. இதுபோன்ற தடங்கல் எனக்கு எனது முதல் படத்திற்கே வந்துள்ளது, பல பிரச்னைகளுக்கு பிறகே அந்த படம் ரிலீஸாகியது . அதற்கு அடுத்த படமும் அதுபோலத்தான் வெளியீட்டிற்கு தடங்களானது. எனக்கு தடங்கல் ஒன்னும் புதிதல்ல, ஏற்கனவே பார்த்ததுதான். மேலும் இந்த வா வாத்தியார் படம் பெரிய தாமதம் மற்றும் போராட்டத்திற்கு பிறகு தற்போது வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: எல்லா பிரச்னையும் ஓவர்… தொடங்கியது வா வாத்தியார் படத்தின் டிக்கெட் புக்கிங் – வைரலாகும் அப்டேட்
தயாரிப்பாளர் ஞானவேல் சொன்னதுபோலவே நானும் நிறையபேருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். குறிப்பாக சூர்யா அண்ணாவிற்கு. அவர்தான் இந்த படத்தின் வெளியீட்டிற்கு பெரிய ஆதரவாக இருந்துருக்கிறார். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தரர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இப்படத்திற்காக 48 மணிநேரமாக தூங்கமால் வேலை செய்திருக்கிறார்கள்” என அந்த செய்தியர்கள் சந்திப்பில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
வா வாத்தியார் படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
With respect and gratitude, Team #VaaVaathiyaar at the #MGR Memorial.#VaaVaathiyaarPongal – From January 14
Bookings Open Now ❤️ pic.twitter.com/w9vpy9fqQj
— Studio Green (@StudioGreen2) January 13, 2026
இந்த வா வாத்தியார் படமானது 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், நிச்சயமாக நாளை 2026 ஜனவரியில் 14ம் தேதியில் காலை 9 மணி முதல் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.