AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராம் சரணின் ராய் ராய் ரா ரா பாடலைப் பாராட்டிய சிரஞ்சீவி – வைரலாகும் போஸ்ட்!

Chiranjeevi praises Rai Rai Ra Ra song: தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகனாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருபவர் ராம் சரண். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பாடலைப் பாராட்டி சிரஞ்சீவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராம் சரணின் ராய் ராய் ரா ரா பாடலைப் பாராட்டிய சிரஞ்சீவி – வைரலாகும் போஸ்ட்!
சிரஞ்சீவி மற்றும் ராம் சரண்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Mar 2026 11:48 AM IST

தெலுங்கு சினிமாவில் 70-வது வயதைக் கடந்தும் இளைம் தலைமுறையினருக்குக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் சிரஞ்சீவி. இவரது நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படம் மன சங்கர சிவ பிரசாத் காரு. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் 50 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் இவரது மகன் ராம் சரணும் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகர் ராம் சரண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் ராம் சரணின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பெடி. இந்தப் படத்தை இயகுநர் புச்சி பாபு சனா எழுதி இயக்கி உள்ள நிலையில் வருகின்ற 30-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இருந்து ராய் ராய் ரா ரா என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியானது. இதனை சிரஞ்சீவி பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராம் சரணின் ராய் ராய் ரா ரா பாடலைப் பாராட்டிய சிரஞ்சீவி:

பெடி படத்தில் வரும் ராய் ராய் ரா ரா பாடல் திரையில் ஒரு அபாரமான நெருப்பாக, ஆற்றல், உணர்ச்சி மற்றும் சினிமா புத்திசாலித்தனத்தின் அற்புதமான கலவையாகத் தெரிகிறது. ராம் சரண் எந்த முயற்சியும் செய்யாமல் அழகாகவும், மின்னூட்டும் வேகத்துடனும் திரையை ஒளிரச் செய்வதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது. அவர் நகரும் விதம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது!

அற்புதமான படமாக்கலுக்கு புச்சி பாபு சனா, மாயாஜால இசையமைப்பு மற்றும் குரல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சக்திவாய்ந்த நடன அமைப்புக்கு ஜானி ஆகியோருக்கு பாராட்டுகள். பெடியின் முழு குழுவும் இன்னும் பல மைல்கற்களை எட்ட வாழ்த்துகிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் சிறப்பாக வந்துள்ளது – நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது வித் லவ் படக்குழு… வைரலாகும் பதிவு

Follow Us